என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணவன் கொலை"
- நான் குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தேன்.
- குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் செய்து தகாத வார்த்தையால் திட்டி என்னை அடித்து துன்புறுத்தினார்.
அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜா(40). கூலி தொழிலாளி இவரது மனைவி கனகா(34) ராஜா என்பவர் கடந்த 1-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் தாய் ராதாமணி அரூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அரூர் போலீசார் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். இந்நிலையில் அவரது மனைவி கனகாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தனது கனவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அளித்துள்ள வாக்குமூலத்தில் எனது கணவர் கூலி தொழில் செய்து வருகிறார். தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து செக்ஸ் டார்ச்சர் செய்வார். சம்பவத்தன்று இரவில் அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்தார்,
பின்னர் என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தார் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினேன், அதை பொருட்படுத்தாமல் அவரது ஆசைக்கு இணங்க என்னை வற்புறுத்தினார்.
நான் குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தேன். பின்னர் அவர் குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் செய்து தகாத வார்த்தையால் திட்டி என்னை அடித்து துன்புறுத்தினார்.
நானும் எனது தற்காப்புக்காக அவரை தாக்கினேன் அதில் அவர் மயக்கம் அடைந்து விட்டார் என எண்ணி நான் கதவை தாளிட்டு உறங்கச் சென்று விட்டேன், மீண்டும் எழுந்து வந்து பார்த்த பொழுது எனது கணவர் அங்கேயே இருந்தார். அவரை நான் தட்டி எழுப்பியபோது இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உடவை யாருக்கும் தெரியாமல் ஓடையில் வைத்து விட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
- மனைவி கைது
- ஒருவரையொருவர் சர மாரி தாக்கி கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல் பூதேரி கிராமத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 37), கூலி தொழிலாளி.
இவ ரது மனைவி மைதிலி(35). இவர் சென்னை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மைதிலியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், நேற்று முன் தினம் இரவு குடிபோ தையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் மைதிலியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, ஒருவரை யொருவர் சர மாரி தாக்கி கொண்டனர்.
ஆத்திரமடைந்த மைதிலி, மணிகண்டனை கீழே தள்ளிவிட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்தார்.இதை கவனிக்காத மைதிலி தூங்க சென்றுவிட்டார்.
நேற்று காலை மைதிலி மயங்கிய நிலை யில் இருந்த மணிகண் டனை எழுப்ப முயன்றார். ஆனால், அவர் எழுந்தி ருக்கவில்லை. அப்போது மணிகண்டன் இறந்தது தெரியவந்தது. இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல றிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருவண்ணா மலை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மைதி லியை நேற்று கைது செய் தனர். பின்னர், அவரை மாஜிஸ்திரேட் முன்னி லையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
- கருப்பாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகே உள்ள வடபருத்தியூர் கிராமம் தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் நாட்டுத்துரை(70). இவரது மனைவி கருப்பாத்தாள்(65). இவர்களது ஒரே மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். நாட்டுத்துரை மற்றும் அவரது மனைவி ஆடுகள் வைத்து வளர்த்து வருகின்றனர்.
நாட்டுத்துரை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரே வீட்டில் அவர்கள் இருந்தபோதும் தனித்தனியாக உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே வீட்டில் இருந்த அரிவாளால் தனது மனைவியை வெட்ட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பாத்தாள் அந்த அரிவாளை பறித்து தனது கணவரை சரமாரியாக வெட்டினார்.
இதில் நாட்டுத்துரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாட்டுத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருப்பாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினையில் கணவரை மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
- தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40) லாரி மெக்கானிகான இவர் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி பானுமதி (34). இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணமானது. ஒரு மகள், மகன் உள்ளனர்.
இந்நிலையில் தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் சண்டை போட்டுக்கொண்டு பானுமதி தனது தாய் வீடான வாலாஜா அடுத்த சின்னதகரகுப்பம் கிராமத்திற்கு சென்றார். 2 வருடங்களாக அங்கேயே வசித்து வந்தார். அங்கும் தேவராஜ் சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு சின்ன தகரகுப்பத்திற்கு சென்ற தேவராஜ் அங்கு மனைவி பானுமதியிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் மனைவியை தாக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த பானுமதி கீழே கிடந்த கட்டையை எடுத்து தேவராஜை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவராஜின் மனைவி பானுமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாரதி மனைவி திவ்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- எனக்கும், கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்படும்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள கீழ்மாந்தூர் பழைய தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மகன் பாரதி (வயது 35). இவரது மனைவி திவ்யா (27). இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர். இதில் பாரதி மட்டும் சென்னையில் தங்கியிருந்து ஒரு டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் கோவில் திருவிழாவுக்காக பாரதி சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போதும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் திருவிழாவுக்கு வந்திருந்த பாரதியை காணவில்லை என அவரது உறவினர் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாரதியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாரதி மனைவி திவ்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் திவ்யாவும், அவரது கள்ளக்காதலன் கீழ்மாந்தூர் ஆர்.ஜே. நகரை சேர்ந்த டேவிட் என்கிற சதீஷ்குமார் ( 38) என்பவரும் சேர்ந்து பாரதியை கழுத்தை நெறித்து கொன்று பாலத்தின் அடியில் புதைத்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீசாரிடம், மேலும் திவ்யா கூறிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு :-
எனக்கும், கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்படும். அவர் சென்னையில் வேலை பார்த்தாலும் போனில் பேசும் போதெல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.
அந்த சமயத்தில் எங்கள் ஊர் அருகே உள்ள சதீஷ்குமார் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் தொடர்ந்து பேசி வந்தோம். கடந்த மாதம் கோவில் திருவிழாவுக்காக கணவர் பாரதி ஊருக்கு வந்தார். அப்போதும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் பாரதியை கொலை செய்ய முடிவு செய்தோம்.
அதன்படி வீட்டில் இருந்த பாரதியை, நானும் சதீஷ்குமாரும் சேர்ந்து அடித்து கழுத்தை நெறித்து கொன்றோம். பின்னர் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் மினிலாரியில் போட்டு கொண்டு திருப்பனந்தாள் அருகே பட்டம் குறுக்கு ரோடு மேலே உள்ள பாலத்தின் அடியில் புதைத்தோம். பின்னர் யாருக்கும் சந்தேகம் எதுவும் வராமல் இருக்க மற்றவர்களிடமும் சகஜமாக பேசினேன். ஆனால் எப்படியோ போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
இதனை தொடர்ந்து திருவிடைமருதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜாபர்சித்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு பாரதி உடலை தோண்டி எடுத்தனர். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து திவ்யா, சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலனோடு சேர்ந்து தொழிலாளியை மனைவியே தீர்த்து கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
- சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வேண்டா (26). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.
வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். சந்தானம் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதும், சந்தேகப்படுவதுமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் எப்போதும் போல் நேற்று காலை மது குடித்துவிட்டு வந்த சந்தனத்துடன் தகராறு செய்த வேண்டா ஆவேசத்துடன் அங்கு இருந்த அம்மிக்கலை தூக்கி சந்தனத்தின் தலையில் போட்டார். மேலும் கோபம் அடங்காமல் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சந்தானத்தின் கழுத்தை அறுத்தார். இதில் சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
சந்தானம் இறந்ததை உறுதிப்படுத்தி கொண்ட வேண்டா பின்னர் தன்னுடைய சேலையால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்
- பெண்ணை ஜெயிலில் அடைத்தனர்
வேலூர்:
வேலூர் அடுத்த இலவம்பாடி கிராமம் கருநிகர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி லதா (29). இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் 2 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர்.
சுரே சுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் கண வன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 14-ந் தேதி இரவு மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுரேஷ் மனை வியை சரமாரியாக தாக்கினார்.
ஆத்திரம் அடைந்த லதா வீட்டில் இருந்த மண் எண்ணெய் கேனை எடுத்து வந்து சுரேஷ் மீது ஊற்றி தீ வைத்தார்.
இதில் உடல் முழுவதும் தீப் பற்றியது. இதனால் சுரேஷ் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்குவந்த சுரேஷ் உடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீசார் லதா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- மதுரை அருகே கணவனை கொன்ற வழக்கில் தனிப்படை போலீசார் பெண்ணை தேடி வருகின்றனர்.
- உடலில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தார்.
திருப்பரங்குன்றம்
தனக்கன்குளம் திருவள்ளு வர் நகரை சேர்ந்தவர் சர்க்கரை(51). இவரது மனைவி அன்னலட்சுமி(48). இவர்களது மகன்கள் சுந்தர பாரதி, ராஜ்குமார். சர்க்கரை அ.ம.மு.க.வில் பகுதி செயலாளராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். சர்க்கரை நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி தலையில் கல்லை போட்டும், உடலில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தார்.
இதில் சர்க்கரை பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்க்கரையின் மகன்கள் சுந்தர பாரதி மற்றும் ராஜ்குமாரை சந்தேகத்தின் போது காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அன்னலட்சுமி மட்டுமே கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
- கடந்த 2-ந்தேதி வீடு திரும்பிய கணவர் சதீஷுக்கு நீத்து பானத்தில் தூக்கமாத்திரையை கலந்துகொடுத்தார்.
- நீத்துவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி வந்து சந்தித்துச்சென்ற ஹர்பால் என்பவரை போலீசார் பிடித்தனர்.
காஜியாபாத்:
டெல்லி அருகே உள்ள காஜியாபாத் நகரில் வசிக்கும் சோட்டேலால் என்பவர், கடந்த 10-ந்தேதி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது சகோதரர் சதீஷ் பாலை (வயது 42) ஒரு வாரமாக காணவில்லை என்று தெரிவித்திருந்தார்.
சதீஷ் பால் காணாமல் போய் சில நாட்கள் ஆகியும் அவர் மனைவி நீத்து ஏன் புகார் தெரிவிக்கவில்லை என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரித்தனர். ஆனால் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
இந்நிலையில் நீத்துவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி வந்து சந்தித்துச்சென்ற ஹர்பால் என்பவரை போலீசார் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், நீத்து, கவுரவ் என்பவரின் உதவியுடன் சதீஷை கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டார். சதீஷ்-நீத்து குடும்பத்துக்கு பழக்கமான ஹர்பாலுக்கும், நீத்துவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கணவரை கொன்றுவிட்டு, திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவெடுத்துள்ளனர். சதீஷை கொல்வதற்கு தனது நண்பரான கவுரவ் என்பவரை பயன்படுத்திக்கொள்ள ஹர்பால் முடிவெடுத்துள்ளார்.
கடந்த 2-ந்தேதி வீடு திரும்பிய கணவர் சதீஷுக்கு நீத்து பானத்தில் தூக்கமாத்திரையை கலந்துகொடுத்தார். அவர் ஆழ்ந்து உறங்கியதும் நீத்துவும், மற்ற இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
கள்ளக்காதலன் ஹர்பாலும், அவரது நண்பர் கவுரவும் கொத்தனார்கள். நீத்துவின் வீட்டின் அருகே புதிதாக ஒரு வீட்டை அவர்கள் கட்டிக்கொண்டிருந்தனர். அங்கேயே சதீஷின் உடலைப் புதைக்க அவர்கள் தீர்மானித்தனர்.
அதன்படி உடலை தரதரவென்று இழுத்துச் சென்று அங்கு புதைத்தனர். பின்னர் அதன் மீது கழிவுநீர் தொட்டி(செப்டிக் டேங்க்) கட்டிவிட்டனர்.
கள்ளக்காதலனின் வாக்குமூலத்தில் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்தநிலையில், கட்டப்படும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று போலீசார் செப்டிங் டேங்கை உடைத்தனர். புதைக்கப்பட்டிருந்த சதீஷின் உடல் பாகங்களை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
கள்ளக்காதலனுடன் பெண் நீத்துவை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள நண்பர் கவுரவை தேடிவருகின்றனர்.
'திரிஷ்யம்' பட பாணியில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் காஜியாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்