என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குடியை கெடுத்த குடிப்பழக்கம்- கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு தற்கொலை செய்த கர்ப்பிணி மனைவி
    X

    வேண்டா - சந்தானம்

    குடியை கெடுத்த குடிப்பழக்கம்- கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு தற்கொலை செய்த கர்ப்பிணி மனைவி

    • வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
    • சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வேண்டா (26). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

    வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். சந்தானம் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதும், சந்தேகப்படுவதுமாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் எப்போதும் போல் நேற்று காலை மது குடித்துவிட்டு வந்த சந்தனத்துடன் தகராறு செய்த வேண்டா ஆவேசத்துடன் அங்கு இருந்த அம்மிக்கலை தூக்கி சந்தனத்தின் தலையில் போட்டார். மேலும் கோபம் அடங்காமல் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சந்தானத்தின் கழுத்தை அறுத்தார். இதில் சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    சந்தானம் இறந்ததை உறுதிப்படுத்தி கொண்ட வேண்டா பின்னர் தன்னுடைய சேலையால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×