அடித்து உதைத்த கணவனை எரித்து கொன்ற மனைவி

மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்தார் பெண்ணை ஜெயிலில் அடைத்தனர்
அடித்து உதைத்த கணவனை எரித்து கொன்ற மனைவி
Published on

வேலூர்:

வேலூர் அடுத்த இலவம்பாடி கிராமம் கருநிகர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி லதா (29). இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் 2 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

சுரே சுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் கண வன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 14-ந் தேதி இரவு மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுரேஷ் மனை வியை சரமாரியாக தாக்கினார்.

ஆத்திரம் அடைந்த லதா வீட்டில் இருந்த மண் எண்ணெய் கேனை எடுத்து வந்து சுரேஷ் மீது ஊற்றி தீ வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப் பற்றியது. இதனால் சுரேஷ் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்குவந்த சுரேஷ் உடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீசார் லதா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com