சேலை வாங்கி தராததால் கணவனை துடிதுடிக்க கொன்ற மனைவி

கணவர் கன்னத்தில் அறைந்ததால் ரேணுகா கோபத்தின் உச்சிக்கு சென்றார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ரேணுகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
சேலை வாங்கி தராததால் கணவனை துடிதுடிக்க கொன்ற மனைவி
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், விகாராபாத்தை சேர்ந்தவர் குமார். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேணுகா.

நேற்று விடுமுறை என்பதால் குமார் வீட்டில் இருந்தார். அப்போது அவரது மனைவி ரேணுகா புதியதாக சேலை வாங்கி தரும்படி கணவரிடம் கேட்டார். அதற்கு குமார் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குமார் தனது மனைவியை கன்னத்தில் அறைந்தார். கணவர் கன்னத்தில் அறைந்ததால் ரேணுகா கோபத்தின் உச்சிக்கு சென்றார்.

வீட்டு சமையலறைக்கு ஓடிய ரேணுகா அங்கிருந்து மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் கண்ணில் வீசினார். என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் ரேணுகா புடவையை எடுத்து கணவரின் கழுத்தில் சுற்றி இறுக்கினார். இதில் அவர் துடி துடித்து இறந்தார்.

பின்னர் ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கணவரை கொலை செய்து விட்டதாக கதறி துடித்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமாரின் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ரேணுகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com