என் மலர்
நீங்கள் தேடியது "Husband Murdered"
- சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவை கடுஷெட்டிஹள்ளி உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்தார்.
- போலீசார் சுமங்கலா மற்றும் நாகராஜு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகாவில் உள்ள நோனவினகெரே அருகே உள்ள கடுஷெட்டிஹள்ளியில் வசித்து வந்தவர் சங்கரமூர்த்தி (வயது 50). இவருடைய மனைவி சுமங்கலா (43).
திப்தூர் நகரில் உள்ள கல்பதரு கல்லூரியின் பெண்கள் விடுதியில் சமையல்காரராக சுமங்கலா பணிபுரிந்து வந்தார். அதே விடுதியில் சமையல் உதவியாளராக கரடலு சாந்தே கிராமத்தை சேர்ந்த நாகராஜூ என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏறப்பட்டது. 2 பேரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த விஷயத்தை அறிந்த சங்கரமூர்த்தி மனைவி சுமங்கலாவை கண்டித்தார். இது பற்றி சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவிடம் தெரிவித்தார். தகாத உறவுக்கு சங்கரமூர்த்தி ஒரு தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ய சுமங்கலாவும், நாகராஜுவும் ஒரு திட்டத்தை வகுத்தனர்.
அதன்படி கடந்த 24-ந்தேதி இரவு சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவை கடுஷெட்டிஹள்ளி உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்தார். பண்ணை வீட்டில் சங்கரமூர்த்தி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவரது கால்களை நாகராஜூ இறுக்கமாக பிடித்துக் கொண்டார். சுமங்கலா, கணவரின் கண்களில் மிளகாய் பொடி, உப்பு பொடி கலந்து ஊற்றினார். இதனால் சங்கரமூர்த்தி சத்தம் போடவே, அவரை கம்பால் அடித்து அவரது கழுத்தை மிதித்து துடிக்க, துடிக்க சுமங்கலா கொலை செய்தார்.
பின்னர் சுமங்கலாவும், கள்ளக்காதலனும் சேர்ந்து சங்கரமூர்த்தியின் உடலை ஒரு சாக்குப் பையில் அடைத்து, சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள துருவேகெரே தாலுகாவில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கொண்டு சென்று அங்கே வீசினர். பின்னர் எந்த சந்தேகமும் ஏற்படாதபடி இருவரும் கிராமத்திற்கு திரும்பினர்.
இதையடுத்து சுமங்கலா தனது கணவர் மாயமானதாக நோனவினகெரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சங்கரமூர்த்தி மீது காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
முதலில் சுமங்கலாவின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆராய்ந்த போலீசார் சுமங்கலாவின் கள்ளக்காதல் மற்றும் கொடூரமான சதித்திட்டத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து சங்கரமூர்த்தியின் பண்ணை வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சங்கரமூர்த்தி தூங்கிக் கொண்டிருந்த படுக்கையில் மிளகாய், உப்பு பொடி மற்றும் ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளமும் காணப்பட்டன.
இதனால் போலீசார் சுமங்கலாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது தானும், கள்ளக்காதலனும் சேர்ந்து சங்கரமூர்த்தியை கொலை செய்ததை சுமங்கலா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சுமங்கலா மற்றும் நாகராஜு ஆகிய இருவரையும் கைது செய்தனர். தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து சங்கரமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவரின் கண்களில் மனைவி மிளகாய், உப்புப் பொடியை ஊற்றி, அவரது கழுத்தை மிதித்து கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
- கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
இந்தூர்:
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது 30). இவருக்கும் சோனம் ரகுவன்ஷி(27) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது, கடந்த மாதம் 23-ந் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள சோஹ்ரா பகுதியில் தேனிலவு கொண்டாட பயணம் மேற்கொண்டனர். முதலில் ஷில்லாங் சென்ற அவர்கள், அங்கிருந்து இரு சக்கர வாகனம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சோஹ்ராவிற்கு சென்றனர். கிழக்கு காசி மலை மாவட்டத்தில், தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு சென்றனர். அங்குள்ள நான்கிரியாட் கிராமத்தில் விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடினர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை, அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் வாடகைக்கு எடுத்த இரு சக்கர வாகனம், ஓஸ்ரா மலைப் பகுதியில் உள்ள சோஹ்ரா ரிம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அதனால் அவர்கள் ட்ரெக்கிங் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்பட்டது. தகவலறிந்த மேகாலயா போலீசாரும் உள்ளூர் மக்களும் இணைந்து தீவிர தேடுதல் பணியைத் தொடங்கினர். இந்தூர் காவல் ஆணையர் சந்தோஷ் சிங், குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் குமார் மேகாலயா விரைந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், மேகாலயா முதல்-மந்திரிகான்ராட் சங்மாவுடன் பேசி, புதுமணத் தம்பதியை கண்டுபிடிக்க உதவி கோரினார். ராஜாவின் சகோதரர் விபின் மற்றும் சோனமின் சகோதரர் கோவிந்த் ஆகியோர் இந்தூரிலிருந்து ஷில்லாங் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஓஸ்ரா மலைப் பகுதி குற்றச் செயல்களுக்கு பெயர் பெற்றது. புதுமணத் தம்பதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜா ரகுவன்ஷி இறந்த நிலையில் உடல் பாதி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
ராஜாவின் உடலில் இருந்து இரண்டு மோதிரங்கள், ஒரு தங்கச் சங்கிலி, வளையல், பர்ஸ், மொபைல் ஆகியவற்றை காணவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே ராஜா ரகுவன்ஷி இறந்த நேரம் மற்றும் பிற தகவல்கள் தெரியவரும். போலீசார் அரிவாள் போன்ற ஆயுதத்தையும் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ராஜா ரகுவன்ஷி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ந்து அவரது மனைவி சோனத்தை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். முன்னதாக தேனிலவின் போது, சோனம் தனது மாமியாருடன் தொலைபேசியில் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- கடந்த 2-ந்தேதி வீடு திரும்பிய கணவர் சதீஷுக்கு நீத்து பானத்தில் தூக்கமாத்திரையை கலந்துகொடுத்தார்.
- நீத்துவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி வந்து சந்தித்துச்சென்ற ஹர்பால் என்பவரை போலீசார் பிடித்தனர்.
காஜியாபாத்:
டெல்லி அருகே உள்ள காஜியாபாத் நகரில் வசிக்கும் சோட்டேலால் என்பவர், கடந்த 10-ந்தேதி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது சகோதரர் சதீஷ் பாலை (வயது 42) ஒரு வாரமாக காணவில்லை என்று தெரிவித்திருந்தார்.
சதீஷ் பால் காணாமல் போய் சில நாட்கள் ஆகியும் அவர் மனைவி நீத்து ஏன் புகார் தெரிவிக்கவில்லை என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரித்தனர். ஆனால் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
இந்நிலையில் நீத்துவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி வந்து சந்தித்துச்சென்ற ஹர்பால் என்பவரை போலீசார் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், நீத்து, கவுரவ் என்பவரின் உதவியுடன் சதீஷை கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டார். சதீஷ்-நீத்து குடும்பத்துக்கு பழக்கமான ஹர்பாலுக்கும், நீத்துவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கணவரை கொன்றுவிட்டு, திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவெடுத்துள்ளனர். சதீஷை கொல்வதற்கு தனது நண்பரான கவுரவ் என்பவரை பயன்படுத்திக்கொள்ள ஹர்பால் முடிவெடுத்துள்ளார்.
கடந்த 2-ந்தேதி வீடு திரும்பிய கணவர் சதீஷுக்கு நீத்து பானத்தில் தூக்கமாத்திரையை கலந்துகொடுத்தார். அவர் ஆழ்ந்து உறங்கியதும் நீத்துவும், மற்ற இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
கள்ளக்காதலன் ஹர்பாலும், அவரது நண்பர் கவுரவும் கொத்தனார்கள். நீத்துவின் வீட்டின் அருகே புதிதாக ஒரு வீட்டை அவர்கள் கட்டிக்கொண்டிருந்தனர். அங்கேயே சதீஷின் உடலைப் புதைக்க அவர்கள் தீர்மானித்தனர்.
அதன்படி உடலை தரதரவென்று இழுத்துச் சென்று அங்கு புதைத்தனர். பின்னர் அதன் மீது கழிவுநீர் தொட்டி(செப்டிக் டேங்க்) கட்டிவிட்டனர்.
கள்ளக்காதலனின் வாக்குமூலத்தில் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்தநிலையில், கட்டப்படும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று போலீசார் செப்டிங் டேங்கை உடைத்தனர். புதைக்கப்பட்டிருந்த சதீஷின் உடல் பாகங்களை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
கள்ளக்காதலனுடன் பெண் நீத்துவை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள நண்பர் கவுரவை தேடிவருகின்றனர்.
'திரிஷ்யம்' பட பாணியில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் காஜியாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
- தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40) லாரி மெக்கானிகான இவர் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி பானுமதி (34). இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணமானது. ஒரு மகள், மகன் உள்ளனர்.
இந்நிலையில் தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் சண்டை போட்டுக்கொண்டு பானுமதி தனது தாய் வீடான வாலாஜா அடுத்த சின்னதகரகுப்பம் கிராமத்திற்கு சென்றார். 2 வருடங்களாக அங்கேயே வசித்து வந்தார். அங்கும் தேவராஜ் சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு சின்ன தகரகுப்பத்திற்கு சென்ற தேவராஜ் அங்கு மனைவி பானுமதியிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் மனைவியை தாக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த பானுமதி கீழே கிடந்த கட்டையை எடுத்து தேவராஜை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவராஜின் மனைவி பானுமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான கொலை சம்பவம் ஒன்று நடந்தது. கணவரை அவரது மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை காரில் எடுத்து சென்று காட்டுக்குள் வைத்து எரித்தனர். 40 நாட்களுக்கு பிறகு அந்த கொலை கண்டு பிடிக்கப்பட்டது. மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.
அதுதொடர்பாக மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு நடந்தது. அதில் அவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. அந்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கு நீதிபதிகள் சந்தானகவுடர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கீழ்க்கோர்ட்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்து தண்டனையையும் குறைத்தார்கள்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. மரணத்தை ஏற்படுத்திய (கோமிசைடு) குற்றமாக கருதி தான் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.
கொலை செய்யப்பட்ட நபர் தனது மனைவியையும், மகளையும் விபச்சாரி என்று அழைத்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணுக்கு உதவியாக அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த கள்ளக்காதலன் வந்துள்ளார். அவர்கள் இருவரும் அவரை தாக்கி உள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள்.
கணவர் தன்னையும், தனது மகளையும் விபச்சாரி என்று அழைத்ததால் கடும் ஆத்திரம் ஏற்பட்டு கணவரை தாக்கி இருக்கிறார்.

தன்னை விபச்சாரி என்று அழைத்த கணவரை ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருப்பதால் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. அதே நேரத்தில் இதை மரணத்தை ஏற்படுத்திய குற்றமாக கருதி அதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும்.
அந்த வகையில் கீழ்க்கோர்ட்டு அளித்த தண்டனையை குறைத்து அவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. #SC






