என் மலர்
நீங்கள் தேடியது "football player"
- போட்டியின் போது மைதானத்தில் முஸ்தபா சைல்லா திடீரென கீழே விழுந்தார்.
- மாரடைப்பால் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
கோஸ்ட்:
ஐவரி கோஸ்ட் நாட்டில் அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டில் அந்நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் முஸ்தபா சைல்லா ரேசிங் கிளப் அணிக்காக விளையாடினார்.
இந்நிலையில், கோல் போஸ்ட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த முஸ்தபா சைல்லா திடீரென மைதானத்திலே கீழே சரிந்து விழுந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் முஸ்தபா சைல்லா மாரடைப்பால் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த வீரருக்கு வயது 21 ஆகும். கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து கால்பந்து வீரர் உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
- வீராங்கனை பிரியா மரணம் விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கால் அகற்றப்பட்டது.
தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.
பெரியார்நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கடந்த 15ம் தேதி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில், இதுபோன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளோம். நாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளனர். ஆனால், மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம்.
சாட்சிகளை கலைக்க மாட்டோம். ஐகோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வீராங்கனை பிரியா மரணம் விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், முன்ஜாமின் மனு மீது 2 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, மருத்துவர்கள் தரப்பு வாதத்தின்போது, "பிரியாவின் அறுவை சிகிச்சைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்த இருவரும் நன்றாக உள்ளனர். இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மருத்துவ குழுவினர் விசாரணைக்கு ஆஜராக வேண்டி உள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
பின்னர், "மருத்துவர்கள் பணியில் கவனக்குறைவாக இருந்தார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவர்களுக்கு முன்ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி "தற்போதுதான் சம்பவம் நடந்துள்ளதால் விசாரணை நடத்த அவகாசம் வேண்டும். உங்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும். ஆனால், எந்த நிவாரணமும் வழங்க முடியாது. வேண்டுமானால் சரண் அடையுங்கள்" என்று தெரிவித்தார்.
- முன்ஜாமின் கோரி மருத்தவர்கள் இரண்டு பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
- பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக 2 மருத்துவர்களும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்ட. சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்கு பதிந்துள்ளனர். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி மருத்தவர்கள் இரண்டு பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மருத்துவர்களான பால்ராம் சங்கர், சோமசுந்தர் ஆகியோரின் மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரிக்கிறார்.
அந்த மனுவில், "பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக" 2 மருத்துவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
- பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும்.
சென்னையில் தவறான சிகிச்சையால் மாணவி பிரியா உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்கு பதிந்துள்ளனர். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
- விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை:
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முன் இறந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவ குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் சிகிச்சையின் போது மருத்துவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததும், மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள்மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாணவிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் காவல்துறைக்கு கிடைக்காததால் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம், காவல்துறையிடம் ஒப்படைத்தது. விசாரணை அறிக்கையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளுவார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
- ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்றிவிட்டனர்.
- கவனக்குறைவான சிகிச்சை தொடர்பாக 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது17). கால்பந்து வீராங்கனையான இவர் மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகும் கால் வலி அதிகரித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றிவிட்டனர்.
அதன்பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்து நேற்று பிரியா பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
- பிரியாவின் குடும்பத்தினர் தற்போது உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நிவாரணம் ரூ.10 லட்சம், மற்றும் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைக்கான ஆணை விரைந்து வழங்கப்படும்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது17). கால்பந்து வீராங்கனையான இவர் மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார்.
அதன்பிறகும் கால் வலி அதிகரித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றிவிட்டனர்.
அதன்பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்து நேற்று பிரியா பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ள தாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி இருந்தார்.
அதன்படி பிரியாவின் சகோதரர்கள் 3 பேரில் யாருக்கு அரசு வேலை தர வேண்டும் என்பதை அரவது குடும்பத்தார் முடிவு செய்து சொன்னால் அவருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.
பிரியாவின் சகோதரர்கள் 3 பேர் இருப்பதால் இதில் யாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை பிரியாவின் பெற்றோர் இன்று முடிவு செய்து அரசுக்கு தகவல் தெரிவிக்க உள்ளனர்.
அதன் அடிப்படையில் நிவாரணம் ரூ.10 லட்சம், மற்றும் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைக்கான ஆணை விரைந்து வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு சொந்த வீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரியாவின் குடும்பத்தினர் தற்போது உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாவின் தாய் அமைச்சர் சேகர் பாபுவிடம் வைத்த கோரிக்கையின் அடிப்பையில் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மாணவி பிரியா குடும்பத்திற்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேசிலை சேர்ந்த முன்னாள் கால்பந்து ஜாம் பவான் ரொனால்டினோ.
2002-ம் ஆண்டு பிரேசில் அணி உலககோப்பையை வெல்ல இவரது ஆட்டம் முக்கியமாக இருந்தது.
38 வயதான ரொனால் டினோ ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். உலக கால்பந்து வீரர் விருதை பெற்ற அவர் பிரிசிலா, பெட்ரிஸ் சவுசா ஆகிய இரண்டு பெண்களை காதலித்து வந்தார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த 2 பெண்களும் ரொனால்டினோவுடன் ஒன்றாக வசித்து வந்தனர். தற்போது அவர்களை அவர் திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார்.
ரொனால்டினா இந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் மணக்கிறார். ஆகஸ்ட் மாதம் சான் டோமானிகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த திருமணம் நடக்கிறது.
ரொனாடில்னோ ஒரே நேரத்தில் 2 பெண்ணை திருமணம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 பெண்களும் 2015-ம் ஆண்டு முதல் ரொனால்டினோவை காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.#ronaldhino