என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐதராபாத்தில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    ஐதராபாத்தில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    • கண்ணூர், பிராங்பேர்ட் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இருந்து ஐதராபாத் வந்த விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக இ-மெயில் வந்தது.
    • வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்பநாய் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விமானங்களில் படிப்படியாக சோதனைகளைத் நடத்தினர்.

    திருப்பதி:

    ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கண்ணூர், பிராங்பேர்ட் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இருந்து ஐதராபாத் வந்த விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக இ-மெயில் வந்ததை அடுத்து அதிகாரிகள் உடனடியாக எச்சரிக்கப்பட்டனர்.

    3 விமானங்களும் ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய வுடன், அதிகாரிகள் அவசர சோதனைகளை மேற்கொண்டனர்.

    வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்பநாய் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விமானங்களில் படிப்படியாக சோதனைகளைத் நடத்தினர்.

    பயணிகளின் பொருட்கள், கேபின் பைகள் மற்றும் சரக்கு பெட்டிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.

    மேலும், இந்த மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து சைபர் கிரைம் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    Next Story
    ×