search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Massive fire"

    • ராய்ப்பூரில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • பற்றி எரியும் தீயால் அந்த பகுதியே புகைமூட்டமாக மாறியது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மின்பகிர்மான நிலையம் அமைந்துள்ளது.

    இந்நிலையில், அந்த மின் பகிர்மான நிலையத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பற்றி எரியும் தீயால் அப்பகுதி புகை மூட்டமாக மாறியது. பற்றி எரிந்த தீயில் ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளது.

    கோடா பகுதியில் உள்ள பாரத் மாதா சவுக் அருகிலுள்ள டிரான்ஸ்பார்மர் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்துச் சிதறின.

    தகவலறிந்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொல்கத்தாவில் துணிக்கடை கட்டிடத்தின் தரை தளத்தில் தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு மளமளவென பரவியது. #Kolkata #Building #FireAccident
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள கரியாஹட் என்ற இடத்தில் 5 மாடிக்கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் துணிக்கடை ஒன்றின் குடோன் உள்ளது. மற்ற தளங்களில் குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில், நேற்று அதிகாலை 1 மணியளவில் திடீரென இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு மளமளவென பரவியது. இதனால் பதறிப்போன மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.

    இதையடுத்து, இது பற்றி தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே சமயம் துணி குடோனில் இருந்த லட்சக்கணக்கிலான மதிப்புடைய சரக்குகள் தீக்கிரையாகின. தீ விபத்து எப்படி நேரிட்டது என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.  #Kolkata #Building #FireAccident
    ×