என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் பலி"
- விபத்தில் உயிரிழந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பயிற்சி மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கார் மரத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த மருத்துவ மாணவர்களான சாருபன், ராகுல் செபஸ்டியன், முகிலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் ஆவர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த கிருத்திக்குமார், சரண் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுவன் ஒருவன் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினார்.
- சிறுவர்களின் சத்தத்தை கேட்ட மாடு மேய்த்து கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவர்களை மீட்க முயன்றனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அஸ்பாரி அடுத்த சிகிரியை சேர்ந்தவர்கள் பீமேஷ், வினய், மஹபூப் பாஷா, சாய் கிரண், சேஷிகுமார், கின்னெரா சாய். இவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளிக்கு அருகில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றனர். 6 சிறுவர்களும் அரட்டை அடித்தபடி குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினார்.
அவரைக் காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக சென்ற 6 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடியபடி சத்தம் போட்டனர்.
சிறுவர்களின் சத்தத்தை கேட்ட மாடு மேய்த்து கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவர்களை மீட்க முயன்றனர். அதற்குள் சிறுவர்கள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
பின்னர் கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து 6 சிறுவர்களின் பிணங்களையும் மீட்டனர். பள்ளியில் படிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் பிணமாக கிடப்பதை கண்டு அவர்களது பெற்றோர்கள் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
- பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தபோது அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
- பள்ளி கட்டிடம் விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளி இன்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டது. பள்ளி திறந்து சிறிது நேரத்திலேயே பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு, பள்ளிக்கு வந்த அப்பகுதி கிராம மக்கள் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தபோது அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் ஆகியோரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் 4 ஜே.சி.பி. எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் அரசு பள்ளி இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,
ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பள்ளி கட்டிடம் விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
- பாழடைந்த நிலையில் இருந்த பள்ளி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பள்ளி இன்று காலை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு பள்ளிக்கு வந்த அக்கம்பக்கத்தினர் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
பாழடைந்த நிலையில் இருந்த பள்ளி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.
கட்டிட விபத்து குறித்து தகவல் அறிந்து ஜலாவர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி அமித் குமார் புடானியா சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பள்ளியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- சம்பவம் குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
வல்லம்:
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் மாதவன் (வயது10).
அதே பகுதியை சேர்ந்த செந்தில் மகன் பாலமுருகன் (10) மற்றும் ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த் (8) இவர்கள் 3 பேரும் திருவேங்கப்புடையான்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 5 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருவேங்கப்புடையான்பட்டியில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் அருகே மருதகுடி கிராமத்தில் நடந்து வரும் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அனைவரும் திருவிழாவை பார்த்து கொண்டு இருந்தனர்.
அப்போது மாதவன், பாலமுருகன், ஜஸ்வந்த் ஆகிய 3 மாணவர்கள் மட்டும் அதேகிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர். ஒன்றாக சேர்ந்து குளித்தபோது குளித்தின் ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கினர். 3 பேருக்கும் நீச்சல் தெரியதால் தண்ணீரில் தத்தளித்து காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர்.
சிறிது நேரத்தில் மாணவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதற்கிடையே 3 பேரையும் திருவிழாவில் காணாதது கண்டு அவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள குளத்திற்கு சென்ற பார்த்தபோது வெளியில் மாணவர்களின் உடமைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் குளத்தில் குதித்து தேடிபார்த்தனர். அப்போது மூழ்கிய நிலையில் இருந்த மாதவன், பாலமுருகன், ஜஸ்வந்த் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பங்கஜ் சர்மாவை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- ரெயில் விபத்து தொடர்பாக 13 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன் மீது மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள். 3 பேர் படுகாயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கு ரெயில்வே கேட் கீப்பர் தான் காரணம் என கருதி அவரை பொதுமக்கள் தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டனர். இந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் குமாரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவரை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டது. அக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ரெயில் விபத்து தொடர்பாக 13 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், ரெயில் விபத்துக்கு ரெயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஆலப்பாக்கம் நிலைய மாஸ்டருக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கொடுத்துள்ளார். இதையடுத்து விபத்து நடைபெற்ற பிறகு, ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து கேட்டை மூடவில்லை என்று பங்கஜ் சர்மா ஒப்புக்கொண்டது ரெயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகி உள்ளது.
இதனை தொடர்ந்து பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் என்பது உறுதியாகி உள்ளது.
இதனிடையே, விபத்து நடைபெற்ற அன்றே, கேட்டை மூடும் போது வேன் ஓட்டுநர் கேட்டை திறக்கச்சொன்னதாக முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
- விபத்து நடந்த போது நிகழ்ந்த தகவல் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது.
திருச்சி:
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் மோதியது. இந்த கோர விபத்தில் மாணவி சாருமதி (16), மாணவர்கள் விமலேஷ் (10), செழியன் (15) ஆகிய 3 பேர் பலியாகினர்.
கேட் கீப்பர் மது அருந்தியிருந்ததாகவும், கேட்டை மூட மறந்துவிட்டு தூங்கியதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், கேட் கீப்பர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு மொழி புரியாததால் ஏற்பட்ட கவனக்குறைவாலேயே இந்த விபத்து நேரிட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த விசாரணைக் குழு விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் திடீர் திருப்பமாக பழைய விசாரணைக் குழு கலைக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் நேற்று முதல் தங்களது விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
இதனிடையே விபத்து நடந்த இடத்தில் பணியில் இருந்த கேட் கீப்பர், லோகோ பைலட், கடலூர், ஆலம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பணியாற்றி வரும் முதுநிலை உதவி லோகோ பைலட், ரெயில் நிலைய மேலாளர், ஆலம்பாக்கம் ரெயில் நிலைய 2 மேலாளர்கள், கடலூர் ரெயில் நிலைய மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியாளர்கள் 2 பேர், ரெயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலூர் பகுதியை சேர்ந்த ஒரு முதன்மை லோகோ ஆய்வாளர், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் என 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
விபத்தில் நேரடியாக தொடர்புடைய கேட் கீப்பர் சிறையிலும், பள்ளி வேன் ஓட்டுநர் மருத்துவமனையிலும் உள்ளனர். ஆகவே மீதமுள்ள 11 பேரிடம் இன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது.
இவர்களிடம் தென்னக ரயில்வே தலைமையகம் சார்பில், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில், மூன்று பேர் கொண்ட விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக குழுவினர் விசாரணை நடத்தினர்.
விபத்து நடந்த போது நிகழ்ந்த தகவல் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது. காலையில் 5 பேர் ஆஜராகி இருந்தனர். மீதமுள்ள 6 பேரும் இன்று மாலைக்குள் ஆஜராவார்கள் எனவும், ரெயில்வே துறை சார்ந்தவர்கள் மீது தவறுகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தனர்.
- ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தெற்கு ரெயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
- கேட் கீப்பர் அறையைப் பார்வையிட்ட பின், அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தெற்கு ரெயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். கேட் கீப்பர் அறையைப் பார்வையிட்ட பின், அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர்.
இதை அடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த ஓட்டுநர் மற்றும் பள்ளி மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரித்தனர்.
- ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
- அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உறங்கி விட்டதாக கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்திற்கு ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆனால் இதனை மறுத்த தென்னக ரெயில்வே, விபத்திற்கு வேன் ஓட்டுநரே காரணம் என்றும் வேன் ஓட்டுநரின் வற்புறுத்தலின் பேரிலேயே கேட் கீப்பர் கேட்டை திறந்ததாக கூறியது. இதற்கு வேன் டிரைவர் மறுப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், கேட் கீப்பரை பார்க்கவில்லை. கேட் திறந்தே இருந்தது. ரெயில் வரும் ஒலிக்கூட கேட்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில், பயணிகள் ரெயில் கடக்கும் முன் தொலைபேசியில் அழைப்பு வந்தும் பங்கஜ் சர்மா பதிலளிக்கவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உறங்கி விட்டதாக கூறப்படுகிறது.
- கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர்.
- ரெயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர். மேலும் வடமாநிலத்தை சேர்ந்தவரை இங்கு பணியமர்த்தும் போது மொழி தெரியாததால் பிரச்சனை ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், செம்மங்குப்பம் ரெயில் கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாடில் நியமித்தது சர்ச்சையான நிலையில், தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரெயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.
- பங்கஜ் சர்மாவை பணிநீக்கம் செய்து தென்னவே ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
- கைதான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, விபத்து தொடர்பாக பங்கஜ் சர்மாவை பணிநீக்கம் செய்து தென்னவே ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில், ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்ததாக கைதான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி வேனில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? என தனியார் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி வேனில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? என விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.






