என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் ரெயில் விபத்து"

    • கடந்த மூன்றரை ஆண்டுகளில், 3 லெவல் கிராசிங் விபத்துகள் நடந்துள்ளன.
    • தமிழ்நாட்டில், இதுவரை 1,053 லெவல் கிராசிங்குகளில், ‘இன்டர்லாக்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    கடலூரில் கடந்த 8-ந் தேதி லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரெயில் மோதியது. இந்த விபத்து குறித்து பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

    கடந்த மூன்றரை ஆண்டுகளில், 3 லெவல் கிராசிங் விபத்துகள் நடந்துள்ளன.

    கடலூர் லெவல் கிராசிங் விபத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பலியானோர் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் மொத்தம் ரூ.11 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில், இதுவரை 1,053 லெவல் கிராசிங்குகளில், 'இன்டர்லாக்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 72 லெவல் கிராசிங்குகளில் இன்டர்லாக்கிங் பணி நடந்து வருகிறது. இந்த வசதி இருந்தால், லெவல் கிராசிங் கதவு மூடப்பட்டு இருந்தால் மட்டுமே ரெயில் செல்ல அனுமதி கிடைக்கும்.

    தமிழ்நாட்டில், லெவல் கிராசிங்குகளை ஒழிக்கும் நோக்கத்தில், 235 ரெயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 92 லெவல் கிராசிங்குகளில், 11 லெவல் கிராசிங்குகளில் ரெயில்வே மேம்பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், தமிழ்நாடு அரசு சம்மதம் தெரிவிக்காததால், 7 மேம்பால பணிகளை தொடங்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெற்கு ரெயில்வே தரப்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
    • கடந்த 8-ந்தேதி ஆலப்பாக்கம் ரெயில் நிலைய மேலாளரிடம் இருந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவுக்கு அழைப்பு சென்றது உறுதி செய்யப்பட்டது.

    கடலூர் அருகே செம்மங்குப்பம் ரெயில்வே கிராசிங்கில் கடந்த 8-ந்தேதி விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த பள்ளி வேன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். வேன் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். விபத்தின் போது பங்கஜ் சர்மா என்பவர் கேட் கீப்பராக பணியில் இருந்தார். அவர் ரெயில்வே கிராசிங் பாதையை மூடாமலிருந்ததே விபத்துக்கு காரணம் என புகார் எழுந்தது.

    இதற்கிடையே, பள்ளி வேன் டிரைவர் கேட்டுக்கொண்டதாலேயே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரெயில்வே கேட்டை திறந்து விட்டதாகவும் தெற்கு ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், பங்கஜ் சர்மா விதியை மீறி செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பங்கஜ் சர்மாவை ரெயில்வே போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவியது. எனவே, இதுகுறித்து விசாரிக்க தெற்கு ரெயில்வே தரப்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழு, கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பள்ளி வேன் ஓட்டுனர் சங்கர், ரெயில் நிலைய மேலாளர்கள், தண்டவாள பராமரிப்பாளர்கள், ரெயில் டிரைவர்கள் என 13 பேரிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில், தெற்கு ரெயில்வே குழுவின் விசாரணை முடிந்து அறிக்கையானது சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த 8-ந்தேதி ஆலப்பாக்கம் ரெயில் நிலைய மேலாளரிடம் இருந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவுக்கு அழைப்பு சென்றது உறுதி செய்யப்பட்டது. அப்போது ரெயில் கடப்பதற்கு முன்பு வழங்கப்படும் ரகசிய குறியீட்டு எண் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜ் சர்மா தொடர்ச்சியாக 3 நாட்கள் பணியில் இருந்துள்ளார். ரெயில்கள் வரும் நேரங்களில் அவர் ரெயில்வே கேட்டை அடைக்காமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையின் அடிப்படையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணி நீக்கம் செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்தது. அதன்படி, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பங்கஜ் சர்மாவை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    • ரெயில் விபத்து தொடர்பாக 13 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன் மீது மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள். 3 பேர் படுகாயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கு ரெயில்வே கேட் கீப்பர் தான் காரணம் என கருதி அவரை பொதுமக்கள் தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டனர். இந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் குமாரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவரை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து, ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டது. அக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ரெயில் விபத்து தொடர்பாக 13 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

    இந்த நிலையில், ரெயில் விபத்துக்கு ரெயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஆலப்பாக்கம் நிலைய மாஸ்டருக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கொடுத்துள்ளார். இதையடுத்து விபத்து நடைபெற்ற பிறகு, ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து கேட்டை மூடவில்லை என்று பங்கஜ் சர்மா ஒப்புக்கொண்டது ரெயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகி உள்ளது.

    இதனை தொடர்ந்து பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் என்பது உறுதியாகி உள்ளது.

    இதனிடையே, விபத்து நடைபெற்ற அன்றே, கேட்டை மூடும் போது வேன் ஓட்டுநர் கேட்டை திறக்கச்சொன்னதாக முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதற்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம்.
    • ரெயில்வே அதிகாரிகள் நள்ளிரவில ஆய்வு மேற்கொண்டனர்.

    கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேட் கீப்பரின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    கேட்கீப்பர் தூங்கிக் கொண்டிருந்ததால் ரெயில் வரும்போது, ரெயில்வே கேட்டை மூடவில்லை. இதனால் பள்ளி வேன் தண்டவளத்தை கடக்கும்போது விபத்து ஏற்பட்டது என குற்றம்சாட்டப்பட்டது. இதனால் கேட் கீப்பர் கைது செய்யப்பட்டதுடன், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அரக்கோணம்- செங்கல்பட்டு ரெயில் மார்க்கத்தில் நள்ளிரவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இரண்டு கேட் கீப்பர்கள் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டறிந்தனர். அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
    • விபத்து நடந்த போது நிகழ்ந்த தகவல் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது.

    திருச்சி:

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் மோதியது. இந்த கோர விபத்தில் மாணவி சாருமதி (16), மாணவர்கள் விமலேஷ் (10), செழியன் (15) ஆகிய 3 பேர் பலியாகினர்.

    கேட் கீப்பர் மது அருந்தியிருந்ததாகவும், கேட்டை மூட மறந்துவிட்டு தூங்கியதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், கேட் கீப்பர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு மொழி புரியாததால் ஏற்பட்ட கவனக்குறைவாலேயே இந்த விபத்து நேரிட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த விசாரணைக் குழு விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் திடீர் திருப்பமாக பழைய விசாரணைக் குழு கலைக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் நேற்று முதல் தங்களது விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    இதனிடையே விபத்து நடந்த இடத்தில் பணியில் இருந்த கேட் கீப்பர், லோகோ பைலட், கடலூர், ஆலம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பணியாற்றி வரும் முதுநிலை உதவி லோகோ பைலட், ரெயில் நிலைய மேலாளர், ஆலம்பாக்கம் ரெயில் நிலைய 2 மேலாளர்கள், கடலூர் ரெயில் நிலைய மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியாளர்கள் 2 பேர், ரெயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலூர் பகுதியை சேர்ந்த ஒரு முதன்மை லோகோ ஆய்வாளர், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் என 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

    விபத்தில் நேரடியாக தொடர்புடைய கேட் கீப்பர் சிறையிலும், பள்ளி வேன் ஓட்டுநர் மருத்துவமனையிலும் உள்ளனர். ஆகவே மீதமுள்ள 11 பேரிடம் இன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது.

    இவர்களிடம் தென்னக ரயில்வே தலைமையகம் சார்பில், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில், மூன்று பேர் கொண்ட விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக குழுவினர் விசாரணை நடத்தினர்.

    விபத்து நடந்த போது நிகழ்ந்த தகவல் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது. காலையில் 5 பேர் ஆஜராகி இருந்தனர். மீதமுள்ள 6 பேரும் இன்று மாலைக்குள் ஆஜராவார்கள் எனவும், ரெயில்வே துறை சார்ந்தவர்கள் மீது தவறுகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தனர். 

    • ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தெற்கு ரெயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
    • கேட் கீப்பர் அறையைப் பார்வையிட்ட பின், அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்த நிலையில், ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தெற்கு ரெயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். கேட் கீப்பர் அறையைப் பார்வையிட்ட பின், அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

    இதை அடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த ஓட்டுநர் மற்றும் பள்ளி மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரித்தனர். 

    • அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
    • 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரெயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர்லாக் அமைப்புகள் நிறுவப்படும்.

    கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு குறித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (ஜூலை 10) ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

    இந்தக் கூட்டத்தில் ரயில்வே லெவல் கிராசிங்குகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் பல புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

    இதுதொடர்பாக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ரெயில்வே கேட் கீப்பர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல் பதிவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அனைத்து ரெயில்வே கேட்டுகளிலும், கேட் கீப்பர் அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

    ஒரு நாளைக்கு 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரெயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர்லாக் அமைப்புகள் நிறுவப்படும். அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து ரெயில் கேட்டுகளையும் ஆய்வு செய்ய ஒரு புதிய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

    • ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
    • செம்மங்குப்பம் ரெயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன் மீது மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.

    3 பேர் படுகாயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கு ரெயில்வே கேட் கீப்பர் தான் காரணம் என கருதி அவரை பொதுமக்கள் தாக்கினார்கள்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டனர். இந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் குமாரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    அவரை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. அக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே ரெயில்வே கேட் கீப்பர் தூங்கிதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ரெயில் வருவதாக விமல் என்ற அதிகாரி பங்கஜ் சர்மாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் பங்கஜ் சர்மா போனை எடுக்கவில்லை.

    அவர் தூங்கி விட்டதாக அதிகாரியிடம் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே செம்மங்குப்பம் ரெயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

    அவர் கூறும்போது, செம்மங்குப்பம் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரெயில்வே கேட் மூடி இருக்கும்போது, 5 அல்லது 10 நிமிடங்கள் பொதுமக்கள் காத்திருந்து செல்ல வேண்டும்.

    செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் தகவல் தொடர்பாக அனைத்து வசதிகளும் உள்ளது என்றார்.

    இந்த நிலையில் ரெயில் விபத்து தொடர்பாக நேரில் ஆஜராக 13 பேருக்கு திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

    பள்ளி வேன் டிரைவர் சங்கர் உள்பட 13 பேரும் நாளை திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • நிமிலேஷ் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்கள், உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் மாணவன் விஷ்வேசுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து நேற்று பெற்றோர்கள் இறந்த நிமிலேஷ் உடலை இன்று வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவன் விஷ்வேஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நிமிலேஷ் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்கள், உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.

    • ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
    • அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்திற்கு ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.

    ஆனால் இதனை மறுத்த தென்னக ரெயில்வே, விபத்திற்கு வேன் ஓட்டுநரே காரணம் என்றும் வேன் ஓட்டுநரின் வற்புறுத்தலின் பேரிலேயே கேட் கீப்பர் கேட்டை திறந்ததாக கூறியது. இதற்கு வேன் டிரைவர் மறுப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், கேட் கீப்பரை பார்க்கவில்லை. கேட் திறந்தே இருந்தது. ரெயில் வரும் ஒலிக்கூட கேட்கவில்லை என்று கூறினார்.

    இந்த நிலையில், பயணிகள் ரெயில் கடக்கும் முன் தொலைபேசியில் அழைப்பு வந்தும் பங்கஜ் சர்மா பதிலளிக்கவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உறங்கி விட்டதாக கூறப்படுகிறது. 

    • கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர்.
    • ரெயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர். மேலும் வடமாநிலத்தை சேர்ந்தவரை இங்கு பணியமர்த்தும் போது மொழி தெரியாததால் பிரச்சனை ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில், செம்மங்குப்பம் ரெயில் கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாடில் நியமித்தது சர்ச்சையான நிலையில், தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரெயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.

    • பங்கஜ் சர்மாவை பணிநீக்கம் செய்து தென்னவே ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
    • கைதான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே, விபத்து தொடர்பாக பங்கஜ் சர்மாவை பணிநீக்கம் செய்து தென்னவே ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த நிலையில், ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்ததாக கைதான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×