என் மலர்
நீங்கள் தேடியது "கேட் கீப்பர்"
- ஆள் இல்லாத ரெயில்வே கேட் வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
- ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை மூடி மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இலங்கியனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் செல்லும் ரெயில் பாதை உள்ளது. இந்நிலையில் இலங்கியனூர் அருகே உள்ள ஆள் இல்லாத ரெயில்வே கேட் வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் கேட் கீப்பர் இல்லாததால் ரெயில் வரும் நேரங்களில் மக்கள் அச்சத்துடன் சென்று வருவதாகவும், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த ரெயில்வே கிராசிங்கில் கேட் கீப்பர் அமைத்து தர வேண்டும் அல்லது ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை மூடி மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் ரெயில்வே அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது அங்கிருந்த ரெயில்வே கேட் மூடப்படாததால் சிக்னல் விழவில்லை என கூறப்படுகிறது.
- சில நிமிடங்கள் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
திருவண்ணாமலை:
விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக நாகர்கோவில்-காச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடாவுக்கு சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில், திருக்கோவிலூர்-திருவண்ணாமலை இடையே தண்டரை கிராமத்திற்கு அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது அங்கிருந்த ரெயில்வே கேட் மூடப்படாததால் சிக்னல் விழவில்லை என கூறப்படுகிறது.
அதனால், நடுவழியிலேயே எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்திவிட்டு, என்ஜின் டிரைவர் கீழே இறங்கி வந்தார். பின்னர், ரெயில்வே கேட் மூடாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கேட் கீப்பரின் அலட்சியத்தால் கேட் மூடாதது தெரியவந்தது.
பின்னர், அவர் ரெயில்வே கேட்டை மூடிவிட்டு சென்றார். இதனால் சில நிமிடங்கள் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
இது தொடர்பாக, எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி தெற்கு ரெயில்வே கோட்ட உயர் அலுவலர்களுக்கு புகார் அளித்தார். அதன் பேரில், துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் ராமு என்பவரை தெற்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்டு செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி கேட்டை மூடாமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஏற்கனவே ரெயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- தெற்கு ரெயில்வே தரப்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
- கடந்த 8-ந்தேதி ஆலப்பாக்கம் ரெயில் நிலைய மேலாளரிடம் இருந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவுக்கு அழைப்பு சென்றது உறுதி செய்யப்பட்டது.
கடலூர் அருகே செம்மங்குப்பம் ரெயில்வே கிராசிங்கில் கடந்த 8-ந்தேதி விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த பள்ளி வேன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். வேன் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். விபத்தின் போது பங்கஜ் சர்மா என்பவர் கேட் கீப்பராக பணியில் இருந்தார். அவர் ரெயில்வே கிராசிங் பாதையை மூடாமலிருந்ததே விபத்துக்கு காரணம் என புகார் எழுந்தது.
இதற்கிடையே, பள்ளி வேன் டிரைவர் கேட்டுக்கொண்டதாலேயே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரெயில்வே கேட்டை திறந்து விட்டதாகவும் தெற்கு ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், பங்கஜ் சர்மா விதியை மீறி செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பங்கஜ் சர்மாவை ரெயில்வே போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவியது. எனவே, இதுகுறித்து விசாரிக்க தெற்கு ரெயில்வே தரப்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழு, கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பள்ளி வேன் ஓட்டுனர் சங்கர், ரெயில் நிலைய மேலாளர்கள், தண்டவாள பராமரிப்பாளர்கள், ரெயில் டிரைவர்கள் என 13 பேரிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில், தெற்கு ரெயில்வே குழுவின் விசாரணை முடிந்து அறிக்கையானது சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த 8-ந்தேதி ஆலப்பாக்கம் ரெயில் நிலைய மேலாளரிடம் இருந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவுக்கு அழைப்பு சென்றது உறுதி செய்யப்பட்டது. அப்போது ரெயில் கடப்பதற்கு முன்பு வழங்கப்படும் ரகசிய குறியீட்டு எண் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜ் சர்மா தொடர்ச்சியாக 3 நாட்கள் பணியில் இருந்துள்ளார். ரெயில்கள் வரும் நேரங்களில் அவர் ரெயில்வே கேட்டை அடைக்காமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையின் அடிப்படையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணி நீக்கம் செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்தது. அதன்படி, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
- விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார்.
பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதுவதற்கு காரணமாக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்களை இத்தகைய பணியில் அமர்த்துவது தான் இந்த விபத்துக்கு காரணம் என்று பெற்றோர் ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
கேட் கீப்பர் குறித்து பேசிய அவர், அந்த கேட் கீப்பர் மது அருந்திவிட்டு தூங்கிவிட்டார் என்று சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமன்றி அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் மொழி பிரச்னை இருந்துள்ளது. முதலில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை இதுபோன்ற முக்கிய இடங்களில் பணியமர்த்துங்கள். ரெயில்வேயின் கவனக்குறைவுதான் இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கிய காரணம்" ஏன்னு ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
- சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவி பலியானார்.
- ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
பணியில் அலட்சியமாக இருந்ததாகக்கூறி கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதுவதற்கு காரணமாக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்கஜ் சர்மாவிடம் ரெயில்வே போலீசாரும், உள்ளூர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விபத்து நடந்த இடத்தில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
- கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார்,
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே, காவல்துறை முறையாக விசாரணை நடத்தும் என்றும் விசாரணைக்குப்பின் கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கச் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பணியில் அலட்சியமாக இருந்ததாகக்கூறி கேட் கீப்பர் பங்கச் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக மேட்டூருக்கு செல்ல ரெயில் பாதை உள்ளது.
இந்த ரெயில் பாதையில் பயணிகள் ரெயில், அனல் மின் நிலையம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி ஏற்றி செல்லும் ரெயில்கள் என ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கிறது.
இந்த வழித்தடத்தில் பத்துக்கும் மேற்பட்ட ரெயில்வே கிராசிங் உள்ளது. இதில் ஓமலூர் அருகே உள்ள மாணத்தால் என்ற இடத்தில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் சந்திரசேகரன் என்பவர் ரெயில்வே கேட் கீப்பராக நேற்று பணியில் இருந்தார்.
இந்த நிலையில் சேலத்தில் இருந்து மேட்டூர் நோக்கி சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதற்காக மாணத்தால் ரெயில்வே கேட் நேற்று மூடப்பட்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த குடிபோதையில் இருந்த 3 பேர் கும்பல் கேட்டை திறக்குமாறு கேட் கீப்பரிடம் வற்புறுத்தினர்.

மேலும் அந்த கும்பலை சேர்ந்த ஒரு வாலிபர் திடீரென கேட் கீப்பரின் முதுகில் கடித்தார். பின்னர் சிக்னல்களுக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பேனல் போர்டையும் அந்த கும்பல் உடைத்ததால் ரெயில்வே சிக்னல்கள் செயல் இழந்தன.
இதனால் சேலத்தில் இருந்து மேட்டூர் நோக்கி சென்ற சரக்கு ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. மேலும் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கேட் கீப்பரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த கேட் கீப்பரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து 3 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சேலத்தில் இருந்து சென்ற ரெயில்வே பொறியாளர்கள் சிக்னல்களை சரி செய்தனர். தொடர்ந்து ரெயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டது. இதனால் அந்த ரெயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. #tamilnews






