என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவர் டிஸ்சார்ஜ்
    X

    கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து காயம் அடைந்த விஷ்வேசை வீட்டிற்கு அழைத்து சென்ற காட்சி.

    பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவர் டிஸ்சார்ஜ்

    • இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • நிமிலேஷ் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்கள், உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் மாணவன் விஷ்வேசுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து நேற்று பெற்றோர்கள் இறந்த நிமிலேஷ் உடலை இன்று வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவன் விஷ்வேஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நிமிலேஷ் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்கள், உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.

    Next Story
    ×