என் மலர்
நீங்கள் தேடியது "students death"
- தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தேனியில் பழக்கடை நடத்தி வருகிறார்.
- இருவரும் தேனி ரெயில் நிலைய குட்செட் வளாகத்தில் உள்ள குட்டைக்குள் பிணமாக கிடப்பது தெரியவந்தது.
தேனி:
தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். விவசாயி. அவருடைய மகன் சிவசாந்தன் (வயது 12). இவர், தேனியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 8-ம் வகுப்பு செல்ல இருந்தார்.
தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தேனியில் பழக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் வீரராகவன் (12). இவரும், சிவசாந்தனுடன் 7-ம் வகுப்பு முடித்து 8-ம் வகுப்பு செல்ல இருந்தார்.
நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றனர். இரவு வரை அவர்கள் வீடு திரும்ப வரவில்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் அவர்களை தேடினர்.
இந்தநிலையில், இருவரும் தேனி ரெயில் நிலைய குட்செட் வளாகத்தில் உள்ள குட்டைக்குள் பிணமாக கிடப்பது தெரியவந்தது. தீயணைப்பு படையினர் வந்து மாணவர்களின் உடல்களை மீட்டனர்.
இதுதொடர்பாக தேனி போலீசார் நடத்திய விசாரணையில், வீரராகவன், சிவசாந்தன் ஆகியோர் கொக்கு பிடித்து விளையாடப் போவதாக சிலரிடம் கூறிக் கொண்டு அந்த பகுதிக்கு வந்ததாகவும், கொக்கு பிடிக்க முயன்றபோது தண்ணீருக்குள் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என்றும் தெரியவந்தது.
- நீரில் மூழ்கி மயங்கி கிடந்த 2 பேரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
- கடலில் மூழ்கி பலியான 2 மாணவர்கள் சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
திருவொற்றியூர் சதானந்தபுரம் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் ஹரிஷ் (வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்பவரின் மகன் ஸ்ரீகாந்த் (20) ஆவார். இவர் பொன்னேரியில் உள்ள கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் திருவொற்றியூரில் உள்ள சுந்தரபுரம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு மாணவர்கள் 2 பேரும், குளித்துக் கொண்டு இருந்தபோது, திடீரென எழுந்து வந்த ராட்சத அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கு குளித்துக்கொண்டு இருந்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்து திருவொற்றியூர் தீயணைப்பு துறை வீரர்கள் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நீரில் மூழ்கி மயங்கி கிடந்த 2 பேரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பலியான இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நண்பர்களுடன் குளித்தபோது, கடலில் மூழ்கி மாயமான மற்றொரு கல்லூரி மாணவரான சந்துரு(20) என்பவரை கடலோர காவல் படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். கடலில் மூழ்கி பலியான 2 மாணவர்கள் சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
- காவிரியில் மூழ்கி பலியானோர் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
சென்னை:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீச்சல் தெரியாத பாண்டியராஜன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், முத்துசாமி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காவிரி ஆற்றில் மூழ்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
- இந்த நிலையில் பள்ளி மாணவன் பள்ளி முடித்துவிட்டு ஏரி ஓடையில் குளித்துக் கொண்டிருந்தான்.
- மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நாகல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்விஜயன் என்பவரின் மகன் ரூபேஷ் (வயது 9). இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளி மாணவன் பள்ளி முடித்துவிட்டு ஏரி ஓடையில் குளித்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது ஆழத்தில் சென்ற ரூபேஷ் தண்ணீரில் முழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ரூபேஷை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் அவன் நீரில் முழங்கி உயிரிழந்தான். இதையடுத்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சமாதானபுரத்தை சேர்ந்த பாலமூர்த்தி பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
- மகாராஜநகரில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பாளை சமாதானபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் பாலமூர்த்தி (வயது 21). இவர் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் துணிகளை காயவைப்பதற்காக கொடி கயிற்றில் போட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் மாண வனின் தந்தை நடராஜன், தாய் பாலம்மாள் தலைமையில் உறவினர்கள் மற்றும் ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் பாளை மகாராஜநகரில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, எங்களது வீட்டின் மேல்புறம் அதிக திறன் கொண்ட மின்வயர் பாதுகாப்பின்றி செல்கிறது. இதனால் தான் பாலமூர்த்தி மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.
நிவாரணம்
எனவே அஜாக்கிரதையாக செயல்பட்ட மின் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற துணை கமிஷனர் சீனிவாசன் தலை மையிலான போலீசார் அனுமதியின்றி இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தனர்.
கைது
இதனால் போலீ சாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலை கண்ணன், திராவிடர் தமிழர் கட்சி நிர்வாகி திருக்குமரன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
எனினும் இந்த கோர விபத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை சுற்றுலா தலம் உள்ளது. தற்போது இங்கு குளுகுளு சீசன் நிலவி வருகிறது. சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
மதுரை எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் ரோகித்சஞ்சய் (வயது21) தனது நண்பர்களுடன் மேகமலைக்கு சுற்றுலா வந்தார். மேகமலையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள மகராஜமெட்டு மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது ரோகித்சஞ்சய் நண்பர்களுடன் பந்தயம் கட்டி அணையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நீந்தி சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதுபற்றி ஹைவேவிஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
நிலைய அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் தீயணைப்புத்துறையினர் ரோகித்சஞ்சையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாலை நேரமாகி விட்டதால் இன்று காலை தேடும் பணி நடந்தது. வெகுநேர தேடுதலுக்கு பின்னர் மாணவர் ரோகித்சஞ்சய் கிடைக்காததால் அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
மற்றொரு சம்பவம்...
பழனி அருகே உள்ள சத்திரப்பட்டியை அடுத்த மஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விவேக் (19). இவர் பட்டிவீரன்பட்டியில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வத்தலக்குண்டு அருகே தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று விவேக் தனது நண்பர்களுடன் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சென்றனர். அருவிக்கு கீழ் பகுதியில் உள்ள ஆபத்தான யானை பள்ளத்தில் அவர்கள் குளித்தபோது விவேக்குக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். அவருடைய நண்பர்கள் விவேக்கை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விவேக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் ஜெங்கால்.கூலித்தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீகாந்த் (6). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீகாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாட்டு சாணம் பொறுக்கச் சென்றான். அப்போது அங்குள்ள திருமலைநம்பி கல்குவாரியில் சேறு சகதி நிறைந்த தண்ணீரில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். சிறிது நேரத்தில் அவன் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தான்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் உடலை போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
முறையான அனுமதியின்றி அரசு அனுமதித்த அளவை காட்டிலும் 2 மடங்கு பள்ளங்கள் தோண்டி கல்குவாரி நடத்தியதோடு அவற்றை முறையாக பராமரித்து தண்ணீர் கிடங்குகளை மூடாமல் அலட்சியமாக விட்டதால் மாணவன் பலியானதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் அரசின் விதிகளை மதிக்காமல் முறைகேடாக கல் குவாரி நடத்தி வரும் திருமலைநம்பி குவாரி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலூரை சேர்ந்தவர் ராமசந்திரன் மகன் சந்தோஷ் (வயது 20). ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. படித்து வந்தார். குறவன் காலனியை சேர்ந்த பாண்டு மகன் சந்துரு (18). இவர் பள்ளிகொண்டா அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று மாலை 2 பேரும் பைக்கில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கரூரில் இருந்து அரக்கோணத்திற்கு டீசல் ஏற்றி சென்ற லாரி ஆம்பூர் அடுத்த உடையராஜ்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்தது.
லாரி டிரைவர் ஊத்தங்கரை அடுத்த பெரிய கள்ளப்பட்டியை சேர்ந்த முருகன் (38) லாரியை பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் வந்த பைக் லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சந்தோஷ் இறந்தார். மேலும் சிகிச்சை பெற்று வந்த சந்துரு இன்று அதிகாலை 3 மணிக்கு இறந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் அம்ரோலி என்ற இடத்தை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள டியூசன் சென்டரில் படித்து வருகிறார்கள். அங்கு படித்து வரும் மாணவர்கள் உள்பட 80 பேர் ஒரு பஸ்சில் டாங் மாவட்டத்தில் உள்ள சபரி அணைக்கட்டுக்கு சுற்றுலா சென்றனர்.
சுற்றுலாவை முடித்து விட்டு அவர்கள் பஸ்சில் சூரத்துக்கு திரும்பினர். அவர்களது பஸ் மகால்-பரிதாபாத் சாலையில் அகவா நகரில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 8 மாணவர்கள் உள்பட 10 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 24 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Gujarataccident