search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி: பாளை மின்வாரிய அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை - 5 பேர் கைது
    X

    முற்றுகையில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.(உள்படம்: பாலமூர்த்தி)

    மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி: பாளை மின்வாரிய அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை - 5 பேர் கைது

    • சமாதானபுரத்தை சேர்ந்த பாலமூர்த்தி பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • மகாராஜநகரில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    பாளை சமாதானபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் பாலமூர்த்தி (வயது 21). இவர் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் துணிகளை காயவைப்பதற்காக கொடி கயிற்றில் போட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    ஆர்ப்பாட்டம்

    இந்நிலையில் மாண வனின் தந்தை நடராஜன், தாய் பாலம்மாள் தலைமையில் உறவினர்கள் மற்றும் ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் பாளை மகாராஜநகரில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறும்போது, எங்களது வீட்டின் மேல்புறம் அதிக திறன் கொண்ட மின்வயர் பாதுகாப்பின்றி செல்கிறது. இதனால் தான் பாலமூர்த்தி மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.

    நிவாரணம்

    எனவே அஜாக்கிரதையாக செயல்பட்ட மின் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற துணை கமிஷனர் சீனிவாசன் தலை மையிலான போலீசார் அனுமதியின்றி இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தனர்.

    கைது

    இதனால் போலீ சாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலை கண்ணன், திராவிடர் தமிழர் கட்சி நிர்வாகி திருக்குமரன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×