என் மலர்
நீங்கள் தேடியது "மாணவன் சாவு"
- இந்த நிலையில் பள்ளி மாணவன் பள்ளி முடித்துவிட்டு ஏரி ஓடையில் குளித்துக் கொண்டிருந்தான்.
- மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நாகல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்விஜயன் என்பவரின் மகன் ரூபேஷ் (வயது 9). இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளி மாணவன் பள்ளி முடித்துவிட்டு ஏரி ஓடையில் குளித்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது ஆழத்தில் சென்ற ரூபேஷ் தண்ணீரில் முழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ரூபேஷை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் அவன் நீரில் முழங்கி உயிரிழந்தான். இதையடுத்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பள்ளி முடிந்ததும் தனது நண்பர் சாலம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
- இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபுபக்கரின் இடது கால் மீது டிராக்டர் சக்கரம் ஏறியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் . அவரது மகன் அபுபக்கர்(வயது15). சித்தால் அரசு மாதிரி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளி முடிந்ததும் தனது நண்பர் சாலம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அபுபக்கர் ஓட்டினார். அரியாந்தக்கா அருகே வந்தபோது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் அபுபக்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபுபக்கரின் இடது கால் மீது டிராக்டர் சக்கரம் ஏறியது. சாலமுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார் காயம் அடைந்த மாணவன் உள்பட இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபுபக்கர் பரிதாபாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- குளத்தில் நீச்சல் பழகும் போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்
- அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த பார்த்தீபன். இவரது மகன் சாந்தகுமார் (வயது 18) இவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் நீச்சல் கற்றுகொள்ளும் ஆர்வத்தில் குமுதேப்பள்ளி தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே உள்ள குளத்தில் நீச்சல் பழகும் போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- ஷியாமும், வேலாயுதமும் மோட்டார் சைக்கிளில் வேலூர்- சேலம் நெடுஞ்சாலையில் சென்றனர்.
- லாரி மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியதில் ஷியாம் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர். இவரது மகன் ஷியாம்(வயது 17). இவர் ஈரோட்டில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 3-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு நேற்று தான் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.
இந்த நிலையில் ஷியாமும் அவருடைய நண்பர் வேலாயுதமும் (19) மோட்டார் சைக்கிளில் வேலூர்- சேலம் நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது ஊத்தங்கரை தனியார் பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஷியாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த வேலாயுதத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷியாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
- எதிர்பாராத விதமாக தர்ஷன் ஆற்றில் மூழ்கியுள்ளார்.
- சிகிச்சை பலனின்றி தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒகேனக்கல்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள அவளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் தர்ஷன் (வயது15) பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார்.
தனது குடும்பத்தினருடன் நேற்று பஸ்ஸில் ஒகேனக்கல் வந்துள்ளனர். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் ஊட்டுமலை பரிசல் துறை காவிரி ஆற்றில் குடும்பத்தினருடன் குளித்தனர்.
அப்போது தர்ஷன் ஆழமான பகுதியில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தர்ஷன் ஆற்றில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் உடனடியாக தர்ஷனை மீட்டனர்.
அதிக அளவில் தண்ணீர் குடித்ததால் மயங்கிய நிலையில் இருந்த தர்ஷனை உடனடியாக மீட்டு ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் பெங்களூர் நகரை சேர்ந்த தேவராஜ் மகன் சேவியர் (18). இவர்பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தனது நண்பர்கள் நான்கு பேருடன் நேற்று ஒகேனக்கல் வந்துள்ளார்.
அப்போது கோத்திக்கல் காவிரி ஆற்றில் குளித்த போது சேவியர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சேவியரை தேடி வருகின்றனர்.
- கொத்தப்பள்ளி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
- உறவினர் வீட்டில் உள்ள பிரிட்ஜ்யை திறந்த போது எதிர்பாராதமாக எலக்ட்ரிக் ஷாக் அடித்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள கொடியாலம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் சந்தோஷ் (வயது 14).
இவர் கொத்தப்பள்ளி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது உறவினர் வீட்டில் உள்ள பிரிட்ஜ்யை திறந்த போது எதிர்பாராதமாக எலக்ட்ரிக் ஷாக் அடித்தது.
இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அதேபகுதியில் உள்ள பனைமரத்தில் சிறுவன் ஏறி உள்ளான்.
- அப்போது கால் தவறி மேலே இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தான்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி டைட்டான் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் உதயா (வயது15).
இந்த சிறுவன் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அதேபகுதியில் உள்ள பனைமரத்தில் சிறுவன் ஏறி உள்ளான்.
அப்போது கால் தவறி மேலே இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தான். உடனே உறவினர்கள் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு நேரத்தில் படிக்காமல் இருந்ததால் இவருடைய மாமா எச்சரித்துள்ளார்.
- சந்தியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி டேம் அருகே உள்ள கண்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் கோவிந்தசாமி (வயது 17). இவர் கே.ஆர்.பி.டேம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தங்கை சந்தியா. இருவரும் இரவு நேரத்தில் படிக்காமல் இருந்ததால் இவருடைய மாமா எச்சரித்துள்ளார்.
இதனால் சந்தியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் மனமுடைந்த அண்ணன் கோவிந்தசாமி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கே.ஆர்.பி டேம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் நீச்சல் கற்றுகொள்வதற்காக குளிக்க சென்றான்.
- அந்த சிறுவன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் சிங். இவரது மகன் மான்சிங் (வயது12). இந்த சிறுவன் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் நீச்சல் கற்றுகொள்வதற்காக குளிக்க சென்றான். அப்போது அந்த சிறுவன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை திலீப்சிங் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்துள்ள மதிகோன்பாளையம் தெருவை சேர்ந்தவர் மாதையன்.இவரது மகன் குருசரண்(வயது 17). தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சாலை விநாயகர் கோவில் அருகே குருசரண் சென்றபோது அவ்வழியாக வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் குருசரணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு பின்னர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- திண்டிவனம் அருகே ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் அவரது மகன் கோகுல்.
- குளத்தில் குளிப்பதற்காக படிக்கட்டில் இறங்கி உள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் அவரது மகன் கோகுல் (வயது 22). இவர் திண்டிவனத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்னூர் கிராமத்தில் சிவன்கோவில் அருகே உள்ள குளத்தில் குளிப்ப தற்காக படிக்கட்டில் இறங்கி உள்ளார்.
அப்போது கால் தவறி குளத்தில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் மீட்க முடியவில்லை. இது குறித்து உடனடியாக மரக்காணம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கோகுல் உடலை மீட்டனர். இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று கோகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நண்பர்களுடன் விளையாடிகொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மதுர பிள்ளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது 13)அரக்கோணம் எஸ் ஆர் கேட் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள கிணற்றில் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தட்சிணா மூர்த்தி கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
இதனையடுத்து அவருடைய நண்பர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரில் விழுந்த மாணவனை மீட்க கிணற்றுக்குள் குதித்தனர். அதற்குள் தட்சிணாமூர்த்தி தண்ணீரில் மூழ்கினார். பின்னர் அவரை பிணமாக மீட்டு அவரது உடலை மேலே கொண்டு வந்தனர்.
இது குறித்து அரக்கோணம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






