இரவு நேரத்தில் படிக்காமல் இருந்ததை கண்டித்ததால் தற்கொலை செய்த பிளஸ்-2 மாணவன் சாவு

இரவு நேரத்தில் படிக்காமல் இருந்ததால் இவருடைய மாமா எச்சரித்துள்ளார்.சந்தியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இரவு நேரத்தில் படிக்காமல் இருந்ததை கண்டித்ததால் தற்கொலை செய்த பிளஸ்-2 மாணவன் சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி டேம் அருகே உள்ள கண்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் கோவிந்தசாமி (வயது 17). இவர் கே.ஆர்.பி.டேம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தங்கை சந்தியா. இருவரும் இரவு நேரத்தில் படிக்காமல் இருந்ததால் இவருடைய மாமா எச்சரித்துள்ளார்.

இதனால் சந்தியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் மனமுடைந்த அண்ணன் கோவிந்தசாமி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கே.ஆர்.பி டேம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com