பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் சாவு

அதேபகுதியில் உள்ள பனைமரத்தில் சிறுவன் ஏறி உள்ளான்.அப்போது கால் தவறி மேலே இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தான்.
பனைமரத்தில் இருந்து தவறி  விழுந்த மாணவன் சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி டைட்டான் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் உதயா (வயது15).

இந்த சிறுவன் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அதேபகுதியில் உள்ள பனைமரத்தில் சிறுவன் ஏறி உள்ளான்.

அப்போது கால் தவறி மேலே இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தான். உடனே உறவினர்கள் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com