என் மலர்

  நீங்கள் தேடியது "slipped into the pond"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டிவனம் அருகே ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் அவரது மகன் கோகுல்.
  • குளத்தில் குளிப்பதற்காக படிக்கட்டில் இறங்கி உள்ளார்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் அவரது மகன் கோகுல் (வயது 22). இவர் திண்டிவனத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்னூர் கிராமத்தில் சிவன்கோவில் அருகே உள்ள குளத்தில் குளிப்ப தற்காக படிக்கட்டில் இறங்கி உள்ளார்.

  அப்போது கால் தவறி குளத்தில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் மீட்க முடியவில்லை. இது குறித்து உடனடியாக மரக்காணம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கோகுல் உடலை மீட்டனர். இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று கோகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×