லாரி மோதி பிளஸ்-2 மாணவன் சாவு

ஷியாமும், வேலாயுதமும் மோட்டார் சைக்கிளில் வேலூர்- சேலம் நெடுஞ்சாலையில் சென்றனர்.லாரி மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியதில் ஷியாம் பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி மோதி பிளஸ்-2  மாணவன் சாவு
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர். இவரது மகன் ஷியாம்(வயது 17). இவர் ஈரோட்டில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 3-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு நேற்று தான் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

இந்த நிலையில் ஷியாமும் அவருடைய நண்பர் வேலாயுதமும் (19) மோட்டார் சைக்கிளில் வேலூர்- சேலம் நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது ஊத்தங்கரை தனியார் பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஷியாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த வேலாயுதத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்து ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷியாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com