search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roof collapses"

    • இன்று காலை திடீரென வீட்டின் கான்கிரீட் கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது
    • துப்புறவு பணியாளர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்

    உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆலம்பாக் காவல்நிலையற்திற்கு உட்பட்ட ஆனந்த் நகர் ரெயில்வே காலனியில் இன்று, ஒரு வீட்டின் கான்கிரீட் கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் சதிஷ் சந்திராவின் குடும்பத்தினர் ஐந்து பேரும் பலியாகினர்.

    கூரை இடிந்து விழுந்தது குறித்து துப்பரவு பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    சதிஷ் சந்திரா (40), அவரது மனைவி சரோஜினி தேவி (35), குழந்தைகள் ஹர்ஷித் (13), ஹர்ஷிதா (10), அன்ஷ் (5) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி சரிந்ததால் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். #Dhanbadroofcollapsed
    தன்பாத்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத்தில் உள்ள கபாசரா என்ற இடத்தில், நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக நேற்று சிலர் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரங்கப் பாதையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தினுள் பொது மக்கள் சிலர் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இறந்த நபரின் அடையாளம் தெரியவில்லை எனவும், மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சுரங்கம், கிழக்கு கோல்பீல்ட் லிமிடெட் (இசிஎல்)நிறுவனத்திற்குட்ப்பட்டது. எனவே, இந்த நிறுவனம் மற்றும் நிறுவனத்திற்கு வெளியில் இருந்து ஆட்கள் சப்ளை செய்த நிறுவனத்திற்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.

    இதனையடுத்து, இசிஎல் பொதுமேலாளர், கபாசரா சுரங்கத்தின் திட்ட அலுவலர்கள், முக்மா பகுதியின் மேலாளர் மற்றும் அவுட்சோர்சிங் கம்பெனி அதிகாரிகள் மீது நிர்சா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  #Dhanbadroofcollapsed

    ராஜஸ்தான் மாநிலத்தில் டிராக்டர் பந்தயத்தை காண்பதற்காக தகர கொட்டகையில் ஏறியபோது கூரை இடிந்து விழுந்ததில் 17 பேர் காயமடைந்தனர். #RajastanAccident #RajastanTractorRace
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் ஆனாஸ் மண்டி என்ற இடத்தில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று டிராக்டர் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியைக் காண்பதற்காக சுமார் 5000 மக்கள் திரண்டிருந்தனர். பாய்ந்து வரும் டிராக்டர்கள் தங்களுக்கு தெரியாததால், சிலர் தகரக் கொட்டகையில் ஏறினர். ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஏறியதால் அந்த கொட்டகை பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது.



    இதனால், கூரையில் இருந்த மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போட்டியைக் காண வந்தவர்கள் சிதறி ஓடியதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 7 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால், அவர்கள் ஸ்ரீகங்காநகர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  

    டிராக்டர் போட்டி நடத்துவதற்கு உள்ளூர் நிர்வாகத்திடம் போட்டி அமைப்பாளர்கள் அனுமதி பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.  #RajastanAccident #RajastanTractorRace



    ×