லக்னோவில் சோகம்: கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

இன்று காலை திடீரென வீட்டின் கான்கிரீட் கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்ததுதுப்புறவு பணியாளர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்
லக்னோவில் சோகம்: கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
Published on

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆலம்பாக் காவல்நிலையற்திற்கு உட்பட்ட ஆனந்த் நகர் ரெயில்வே காலனியில் இன்று, ஒரு வீட்டின் கான்கிரீட் கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் சதிஷ் சந்திராவின் குடும்பத்தினர் ஐந்து பேரும் பலியாகினர்.

கூரை இடிந்து விழுந்தது குறித்து துப்பரவு பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

சதிஷ் சந்திரா (40), அவரது மனைவி சரோஜினி தேவி (35), குழந்தைகள் ஹர்ஷித் (13), ஹர்ஷிதா (10), அன்ஷ் (5) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com