search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Accident"

    • கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா்.
    • விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    ஆத்தூர்:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சேகா்(வயது 42). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கோவிலுக்கு ஒரு காரில் வந்தார்.

    அப்போது அவருடன் அவரது மனைவி நித்திய கலா (41), அவர்களது மகள் தீக்ஷித் (13), மகன் ரித்விக்(8) ஆகியோரும், உறவினர்களான வனஜா(61), காா்த்திக் (40) ஆகியோரும் வந்திருந்தனர். காரை சேகர் ஓட்டி சென்றார்.

    கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா். திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் பழைய காயல் அருகே கார் சென்ற போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று காரின் இடிபாட்டில் சிக்கிய 6 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக ஆத்தூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் சோ்ந்தமங்கலம் தாலுகாவை சேர்ந்த ராமசாமி (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடியில் இருந்து கீழவைப்பார் செல்லும் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்தில் பலத்த காயம் அடைந்த மனோஜ் குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் ஜோதிகேசவன் (வயது19). இவரது நண்பர் ஈரோடு வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் (21).

    தசரா விழாவிற்கு வந்திருந்த மனோஜ்குமார், ஜோதிகேசவன் வீட்டில் தங்கியிருந்தார். நண்பர்கள் இருவரும் சம்பவத்தன்று ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் குளத்தூர் சென்று விட்டு பின்னர் இரவில் அவர்கள் மீண்டும் வீடு திரும்பி உள்ளனர்.

    அவர்கள் வேப்பலோடை அருகில் வரும்போது தூத்துக்குடியில் இருந்து கீழவைப்பார் செல்லும் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் பலத்த காயம் அடைந்த மனோஜ் குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பவ இடத்திற்கு தருவைகுளம் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த ஜோதிகேசவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான புதூர்பாண்டியாபுரம் சேர்ந்த மதுரைவீரன் (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முக்காணி பங்க் அருகே செல்லும்போது பின்னால் வேகமாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி தேவர் தெருவை சேர்ந்தவர் முத்து ராமலிங்கம். இவருக்கு பாதாளவடிவு என்ற மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

    இதில் இளைய மகன் மாதவன் (வயது 24) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது ஊரில் நடைபெற்ற கோவில் கொடை விழாவிற்காக ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு பூக்கள் வாங்குவதற்காக பழையகாயலுக்கு அவரது நண்பர் ஏரலை சேர்ந்த சங்கரலிங்கம் என்ற கோகுல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    முக்காணி பங்க் அருகே செல்லும்போது பின்னால் வேகமாக வந்த வேன், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். மாதவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மாதவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாதவனின் அண்ணன் இசக்கிதுரை (34) கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு முன்பு திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் உறவினர்கள், வேன் டிரைவரை கைது செய்ய கோரி நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த எம்.சான்ட் ஏற்றி வந்த லாரி மீது வெயில் ராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • தகவல் அறிந்து விரைந்து வந்த கயத்தாறு போலீசார், வெயில்ராஜ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பனிக்கர்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாகலாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாபநாசம். விவசாயி. இவரது மகன் வெயில்ராஜ்(வயது 23).

    இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அப்பகுதியில் உள்ள கையுறை தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு லைசென்ஸ் எடுப்பதற்காக அவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    கயத்தாறு அருகே சவலாப்பேரி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த எம்.சான்ட் ஏற்றி வந்த லாரி மீது வெயில் ராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த வெயில்ராஜ் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கயத்தாறு போலீசார், வெயில்ராஜ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சண்முகராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மதன்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது.
    • உயிரிழந்த சண்முகராஜ், சுடலைமணி ஆகியோரது உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 42). பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (55) தொழிலாளி. இருவரும் வேலையை முடித்துவிட்டு விளாத்திகுளத்தில் இருந்து அரியநாயகிபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

    இதேபோன்று கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் மதன்குமார் (21). வேம்பார் அருகே உள்ள கன்னிராஜபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் சுடலைமணி (20). இவர்கள் இருவரும் வேம்பாாில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இருவரும் கல்லூரி முடித்துவிட்டு வேம்பாாில் இருந்து கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் விளாத்திகுளம்- வேம்பார் சாலையில் செவ்வலூரணி அருகே வரும்பொழுது சண்முகராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மதன்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் சண்முகராஜ் மற்றும் சுடலைமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சண்முகம் மற்றும் மதன்குமார் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் சென்று படுகாயமடைந்த சண்முகம், மதன்குமார் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் உயிரிழந்த சண்முகராஜ், சுடலைமணி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மதன்குமார், சண்முகம் ஆகிய இருவரும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

    • கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த போது தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது.
    • அஜித் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவில்பட்டி:

    கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம், பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகன். இவரது மகன் அஜித் (வயது25). இவர் பெங்களூரில் வேலைக்காக நேர்முக தேர்வுக்கு சென்றார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் இருந்து ஊருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.‌

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த போது தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அஜித் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகைகுளம் வர்த்தகரெட்டிபட்டியில் செல்லும் போது திடீரென நிலைதடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • உடனடியாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மேலஅலங்காரதட்டை சேர்ந்தவர் கைசான்முரை (வயது40). வக்கீல். இவரது மனைவி மரியசூடுநிஷா (38), இவர்களது மகள் தாரணிமுராய் (8). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் தாரணி முராய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த 21-ந்தேதி அழைத்து வந்தனர்.

    பின்னர் கைசான்முரை மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் மகளை அழைத்து கொண்டு தூத்துக்குடி சென்றார்.

    அவர்கள் வாகைகுளம் வர்த்தகரெட்டிபட்டியில் செல்லும் போது திடீரென நிலைதடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் தாரணி முராய் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ஆட்டோ நள்ளிரவில் கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை அருகே உள்ள வளைவில் சென்ற போது எதிரே மார்த்தாண்டத்தில் இருந்து திருவேங்கடம் நோக்கி வந்த டிப்பர் லாரி லோடு ஆட்டோ மீது மோதியது.
    • லோடு ஆட்டோவில் பயணம் செய்த ராஜதுரை என்பவரது 8 மாத ஆண் குழந்தை கபிலேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    கோவில்பட்டி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 39). இவரது மனைவி முத்துசெல்வி (37). இவர்களது மகன் தினேஷ் (16).

    விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடிவெள்ளி கொடையை முன்னிட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஈஸ்வரன் தனது குடும்பத்தினர் மற்றும் அதே பகுதியில் உள்ள சிலருடன் லோடு ஆட்டோவில் நேற்று இரவு புறப்பட்டு சென்றார்.

    லோடு ஆட்டோவை புளியங்குடியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் ஓட்டிச்சென்றார்.

    ஆட்டோ நள்ளிரவில் கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை அருகே உள்ள வளைவில் சென்ற போது எதிரே மார்த்தாண்டத்தில் இருந்து திருவேங்கடம் நோக்கி வந்த டிப்பர் லாரி லோடு ஆட்டோ மீது மோதியது.

    இதில் லோடு ஆட்டோவில் பயணம் செய்த ராஜதுரை என்பவரது 8 மாத ஆண் குழந்தை கபிலேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    மேலும் ரமேஷ் (29), வீரமணி (22), சமுத்திரவேல் மனைவி ராணி (39), இவரது மகள் விசுவாதினி (15), உயிரிழந்த கபிலேஷ் குமாரின் தாய் முகேஷ்பிரியா (23), மணிகண்டன் மனைவி கிருஷ்ண லீலாவதி, இவரது 2 வயது மகன் மதுரேஷன், மாடசாமி மகள் முக்தாஸ்ரீ (6), சிவா (18), பரமசிவன் (40), மாணிக்கம் (38), மனோஜ்(25), இனேஷ் (7), குமார் (47), டிரைவர் சுந்தரமூர்த்தி உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதில் முகேஷ் பிரியா, கிருஷ்ணலீலாவதி, மனோஜ், இனேஷ், முக்தாஸ்ரீ, மதுரேஷன், ராணி ஆகிய 7 பேர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே கிருஷ்ணாலீலாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த மார்த்தாண்டத்தை சேர்ந்த டிரைவர் சிவராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திட்டங்குளம் தொழிற்பேட்டை முன்பு சாலையை கடக்க முயன்ற போது, எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மார்சல்ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் மார்சல்ராஜா உள்ளிட்ட 4 பேரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெங்கடேஷ்வராபுரத்தை சேர்ந்தவர் மார்சல் ராஜா (வயது38). இவர் காடல்குடி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேவிகா (30). இவர்களுக்கு ரஸ்வந்த் (6), ரிஷாந்த் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மார்சல்ராஜா, தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி திட்டங்குளம் சென்றார். பின்னர் மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர்.

    திட்டங்குளம் தொழிற்பேட்டை முன்பு சாலையை கடக்க முயன்ற போது, எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மார்சல்ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மார்சல்ராஜா உள்ளிட்ட 4 பேரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிறுவன் ரிஷாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றுகாலை சிகிச்சை பலனளிக்காமல் மார்சல்ராஜாவும் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த விளாத்திகுளம் பூமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவராமச்சந்திரனை (24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த 8 குழந்தைகளும் தூக்கி வீசப்பட்டனர்.
    • மாணவன் செல்வ நவீன் ஆட்டோவின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லையை அடுத்த செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில் பயிலும் 8 மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை ஒரு ஆட்டோ பள்ளிக்கு சென்றது.

    இந்த ஆட்டோவில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை வெட்டியம்பந்தி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் செல்வநவீன் ( வயது 5), முத்தாலங்குறிச்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் நவீன்குமார் ( 5), மகள்கள் முகிலா ( 11), ராகவி ( 6), பார்வதி நாதன் என்பவரது மகள் குணவதி ( 4), நல்லத்தம்பி மகன் இசக்கிராஜா( 5), ஆறுமுககுமார் என்பவரது மகள் அபிராமி, மகன் அரிவரதன் ஆகிய 8 பேரும் சென்றனர்.

    ஆட்டோ அனவரத நல்லூர் - வசவப்பபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த 8 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    மாணவன் செல்வ நவீன் ஆட்டோவின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். செல்வநவீன் எல்.கே.ஜி. மாணவர் ஆவார். மற்ற 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த 7 மாணவர்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் பலியான மாணவன் செல்வ நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேல நாட்டார்குளத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவது தெரியவந்தது.

    இன்று சரவணன் தன்னுடைய மற்றொரு ஆட்டோவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற நிலையில் விபத்துக்குள்ளான ஆட்டோவை மேல நாட்டார்குளத்தை சேர்ந்த ராஜூ என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவர் செல்போன் பேசியபடி ஆட்டோவை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் நள்ளிரவில் டயர் வெடித்து கண்டெய்னர் லாரி மீது வேன் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் நேற்று இரவு தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு சென்றது.

    வேனை நெல்லை பண்டாரகுளத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 45) என்பவர் ஓட்டிச்சென்றார். இரவு 10 மணியளவில் வேன் தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென வேனின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி சாலையில் கவிழ்ந்தது.

    இதில் நெல்லை படையாச்சி தெருவை சேர்ந்த தொழிலாளி முத்துக்குமார் (43) என்பவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.

    வேன் டிரைவர் ராமச்சந்திரனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும் வேனில் சென்ற தொழிலாளர்களான நெல்லை திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த ராமலட்சுமி (23), வெங்கடேஸ்வரி (22), வல்லநாட்டை சேர்ந்த ரமேஷ் (21), மணக்காடு பகுதியை சேர்ந்த கோமதி (28), துரைச்சி (27), திரேகா (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் உயிரிழந்த முத்துக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தனியார் பஸ்சை ஓட்டி வந்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடன்குடி:

    திருச்செந்தூர் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 55). இவர் உடன்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி செய்து வருகிறார்.

    நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வழியாக சாத்தான்குளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது உடன்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற தனியார் ஆம்னி பஸ் உடன்குடி அருகே வந்த போது சந்தனகுமார் மீது மோதியது. இதில் சந்தனகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பலியான சந்தன குமாரின் மனைவி ரவிகலா குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நிலம் கையகப்படுத்தும் தாசில்தாராக பணி செய்து வருகிறார்.

    இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதுசம்பந்தமாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    தனியார் பஸ்சை ஓட்டி வந்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார்(38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×