கோவில்பட்டி அருகே தடுப்பு கம்பியில் மோதி தலை துண்டிக்கப்பட்டு வாலிபர் பலி

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த போது தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது.அஜித் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டி அருகே தடுப்பு கம்பியில் மோதி தலை துண்டிக்கப்பட்டு வாலிபர் பலி
Published on

கோவில்பட்டி:

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம், பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகன். இவரது மகன் அஜித் (வயது25). இவர் பெங்களூரில் வேலைக்காக நேர்முக தேர்வுக்கு சென்றார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் இருந்து ஊருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.‌

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த போது தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் அஜித் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com