ஆத்தூர் அருகே கார் மீது லாரி மோதி 6 பேர் படுகாயம்

கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா். விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
ஆத்தூர் அருகே கார் மீது லாரி மோதி 6 பேர் படுகாயம்
Published on

ஆத்தூர்:

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சேகா்(வயது 42). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கோவிலுக்கு ஒரு காரில் வந்தார்.

அப்போது அவருடன் அவரது மனைவி நித்திய கலா (41), அவர்களது மகள் தீக்ஷித் (13), மகன் ரித்விக்(8) ஆகியோரும், உறவினர்களான வனஜா(61), காா்த்திக் (40) ஆகியோரும் வந்திருந்தனர். காரை சேகர் ஓட்டி சென்றார்.

கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா். திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் பழைய காயல் அருகே கார் சென்ற போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று காரின் இடிபாட்டில் சிக்கிய 6 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக ஆத்தூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் சோ்ந்தமங்கலம் தாலுகாவை சேர்ந்த ராமசாமி (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com