தூத்துக்குடியில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 3-ம் வகுப்பு மாணவி பலி

வாகைகுளம் வர்த்தகரெட்டிபட்டியில் செல்லும் போது திடீரென நிலைதடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தூத்துக்குடியில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 3-ம் வகுப்பு மாணவி பலி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மேலஅலங்காரதட்டை சேர்ந்தவர் கைசான்முரை (வயது40). வக்கீல். இவரது மனைவி மரியசூடுநிஷா (38), இவர்களது மகள் தாரணிமுராய் (8). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தாரணி முராய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த 21-ந்தேதி அழைத்து வந்தனர்.

பின்னர் கைசான்முரை மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் மகளை அழைத்து கொண்டு தூத்துக்குடி சென்றார்.

அவர்கள் வாகைகுளம் வர்த்தகரெட்டிபட்டியில் செல்லும் போது திடீரென நிலைதடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் தாரணி முராய் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com