என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய டிரான்ஸ்பார்மரை பெரியகருப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    X
    புதிய டிரான்ஸ்பார்மரை பெரியகருப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர்கள் தொடக்கம்

    திருப்பத்தூரில் 250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர், நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் தெற்கு ரத வீதியில் மின்வாரியத்தின் சார்பாக சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. 

    இதை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ரிப்பன் வெட்டி இயக்கி வைத்தார். அமைச்சரை பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், 12-வது வார்டு கவுன்சிலர் பிளாசா ராஜேஸ்வரி சேகர் ஆகியாேர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். 

    மின்வாரிய செயற்பொ றியாளர் செல்லத்துரை புதிய மின்மாற்றி பற்றி விளக்கினார்.இந்நிகழ்ச்சி யில் உதவி செயற்பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் முத்தரசி மற்றும் திருப்பத்தூர் மின்சார வாரிய அனைத்து பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×