என் மலர்
நீங்கள் தேடியது "prisoners escaped"
- சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சில கைதிகள் காவலர்களின் அறைக்குள் நுழைந்தனர்.
என்ஜாமெனா:
மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டின் மோங்கோ நகரத்தில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு தண்டனை கைதிகள் உள்பட சுமார் 500 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அங்குள்ள கைதிகள் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் குவேரா மாகாண கவர்னர் மோங்கோ சிறைச்சாலையை பார்வையிட சென்றிருந்தார். அப்போது சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் சில கைதிகள் காவலர்களின் அறைக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கு கலவரம் வெடித்தது.
இந்த கலவரத்தில் 3 பேர் பலியாகினர். கவர்னர் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி 130-க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்தோனேசியா நாட்டின் அசே மாகாணத்தில் உள்ள பன்டா அசே பகுதியில் உள்ள மத்திய சிறையில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி மாலை 113 கைதிகள் தப்பியோடி விட்டனர்.

இந்நிலையில், தப்பிச்சென்ற கைதிகளில் இதுவரை 36 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 77 பேரை தேடி வருகின்றனர். அவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என அசே மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் எரி அப்ரியோனோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Indonesiajail #jailinmatesrun
யங்கூன்:
மியான்மரில் ஹபா-அன் என்ற இடத்தில் சிறைச் சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி கொண்ட கைதிகள் சிறை வளாகத்தை உடைத்துக் கொண்டு வெளியேறினர். அப்போது அவர்களை தடுத்த சிறை அதிகாரியை பயங்கரமாக தாக்கினர். அதில் அவர் காயம் அடைந்தார்.
பின்னர் கிழக்கு கரோன் மாகாணத்தில் இருந்து சிறைக்கு வந்த லாரியை மடக்கி அதில் ஏறி 41 கைதிகள் தப்பினர். அதையடுத்து கைதிகளை தேடும் பணி நடந்தது.
அவர்களில் 3 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர். எஞ்சிய கைதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்கத்து கிராமங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் காணப்பட்டதால் தகவல் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. #myanmarjailbreak






