என் மலர்
நீங்கள் தேடியது "myanmar jail break"
யங்கூன்:
மியான்மரில் ஹபா-அன் என்ற இடத்தில் சிறைச் சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி கொண்ட கைதிகள் சிறை வளாகத்தை உடைத்துக் கொண்டு வெளியேறினர். அப்போது அவர்களை தடுத்த சிறை அதிகாரியை பயங்கரமாக தாக்கினர். அதில் அவர் காயம் அடைந்தார்.
பின்னர் கிழக்கு கரோன் மாகாணத்தில் இருந்து சிறைக்கு வந்த லாரியை மடக்கி அதில் ஏறி 41 கைதிகள் தப்பினர். அதையடுத்து கைதிகளை தேடும் பணி நடந்தது.
அவர்களில் 3 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர். எஞ்சிய கைதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்கத்து கிராமங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் காணப்பட்டதால் தகவல் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. #myanmarjailbreak






