என் மலர்
நீங்கள் தேடியது "female president"
- நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
- நிகழ்ச்சியில் தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விண்ட்ஹோயிக்:
ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தென்மேற்கு ஆப்பிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சி 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இந்தநிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது முன்னாள் அதிபர் நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் ஆப்பிரிக்காவின் 2-வது பெண் அதிபர் என்ற பெருமையை நெடும்போ பெற்றுள்ளார்.
- அரசு நடத்தும் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- அதிபர் கடாலின் நோவக்குக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன.
ஹங்கேரி நாட்டுப் பெண் அதிபராக இருந்தவர் கடாலின் நோவக். இவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபருக்கு மன்னிப்பு வழங்கினார்.
அரசு நடத்தும் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த நிர்வாகிக்கு அதிபர் கடாலின் நோவக் மன்னிப்பு வழங்கி இருந்தார். இதற்கு நீதித்துறை மந்திரி ஜூடிட் லர்கா அனுமதி அளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிபர் கடாலின் நோவக்குக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன.
இந்த நிலையில் கடாலின் நோவக் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் தொலைக்காட்சியில் கூறும்போது நான் ஒரு தவறு செய்துவிட்டேன். குழந்தைகள் இல்ல நிர்வாகி, துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று நம்பி மன்னிப்பு வழங்க முடிவு செய்தேன்.
ஆனால் அதில் நான் தவறு செய்துவிட்டேன். இன்று நான் உங்களை அதிபராக சந்திப்பது கடைசி நாள் என்றார்.
அதேபோல் நீதித்துறை மந்திரி வர்காவும் பதவி விலகினார்.






