பாகிஸ்தானின் 12 நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்.. 80 பேர் உயிரிழப்பு

ரெயில் தண்டவாளங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகளை செயலிழக்கச் செய்ததால் ஒரு பெரிய சம்பவம் தவிர்க்கப்பட்டது.நுஷ்கியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு படை தலைமையகம் மற்றும் எல்லைப் படை தளங்களைக் கைப்பற்றியதாக BLA கூறியுள்ளது.
பாகிஸ்தானின் 12 நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்.. 80 பேர் உயிரிழப்பு
Published on

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி நேற்று வரை பலுசிஸ்தானின் குவெட்டா, குவாதர் மற்றும் மக்ரான் உள்ளிட்ட 12 முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் படையினர், காவல் நிலையங்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன.

பாகிஸ்தான் ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தாக்குதல்களில் 10 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

நுஷ்கியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு படை தலைமையகம் மற்றும் எல்லைப் படை தளங்களைக் கைப்பற்றியதாக BLA கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம் இதை உறுதிப்படுத்தவில்லை.

இதற்கிடையே நசிராபாத் மாவட்டத்தில் ரயில் தண்டவாளங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகளை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து செயலிழக்கச் செய்ததால் ஒரு பெரிய சம்பவம் தவிர்க்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்களின் தீவிரம் 34 சதவீதம் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பலூச் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) இயக்கத்தினர் அண்மைக் காலமாக அதிகளவில் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  

X

Maalai Malar
www.maalaimalar.com