என் மலர்tooltip icon

    இந்தியா

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு உமர் அப்துல்லா அழைப்பு
    X

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு உமர் அப்துல்லா அழைப்பு

    • பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
    • உமர் அப்துல்லா தலைமையில் இன்று மாலை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே உள்ளது பைசாரன் பள்ளத்தாக்கு. அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. பஹல்காம் மற்றும் பைசாரன் ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத்தலமாகும்.

    இந்த பகுதியில் நேற்று திடீரென சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஒவ்வொருவரின் பெயரை கேட்டு, தாக்குதல் நடத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனக் கூறப்படுகிறது.

    2019ஆம் ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா மூலம் அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறைதான் முதுகெலும்பாக உள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இந்த நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல், சுற்றுலாத்துறை கேள்விக்குறியதாக்கியுள்ளது.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று மாலை சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    பயங்கரவாத தாக்குதல் குறித்தும், இதனால் சுற்றுலாத்துறையில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×