என் மலர்
நீங்கள் தேடியது "Jammu Kashmmir"
- வர்த்தகத்திற்காக பயன்படுத்தி வந்த காரை விற்க நேரிட்டது.
- நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கின் முதல் பெண் இ-ரிக்ஷா ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார் 39 வயதான மீனாட்சி தேவி. கடந்த ஆண்டு இவரின் கணவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை செலவுக்காக மீனாட்சி தேவியின் குடும்ப சூழல் தலைகீழாக மாறிப் போனது. இதன் காரணமாக மீனாட்சி தேவியின் குடும்பம் வர்த்தகத்திற்காக பயன்படுத்தி வந்த காரை விற்க நேரிட்டது.
குடும்ப சூழலில் மனம் தளராத மீனாட்சி, நிதி நிலையை எதிர்கொள்ள தானே களத்தில் இறங்க முடிவு செய்தார். அதன்படி இ-ரிக்ஷா ஓட்டி வருமானம் ஈட்டலாம் என அதற்கான பணிகளை துவங்கினார். இவரது முடிவுக்கு அவரது உறவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதே போன்று நண்பர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா கூட்டமைப்பினரும் இவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும், எதிர்ப்புகளை கடந்து செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் இ-ரிக்ஷா ஓட்டும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். முதற்கட்டமாக இவரது தொழில் சற்று சுமாராகவே இருந்துள்ளது. ஆனால், தற்போது தினமும் நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
"முதலில் எல்லாரும் என்ன வேற்றுகிரகவாசி போன்றே பார்த்தனர். ஆனால், எதிர்ப்புகளை கண்டு கவலை கொள்ளாமல், எனது நிலைமையை எப்படி மாற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். இதன் மூலம் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை சம்பளம் ஈட்டுகிறேன். எனது வாடிக்கையாளர்களுக்கு தொடர் சேவை வழங்குவதால் என்னை யாரும் ஆட்டோ ஸ்டாண்ட்-இல் பார்க்க முடியாது," என்று மீனாட்சி தேவி தெரிவித்தார்.
- ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படைவீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள்மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படைவீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என தெரிவித்துள்ளார்.
- ராணுவ வாகனத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
- பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் பகுதியில் உள்ள போடாபதேர் பகுதியில் ராணுவ வீரர்கள் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 2 போர்ட்டர்களும் பலியாகினர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றன.
பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.