என் மலர்
நீங்கள் தேடியது "Delhi Metro Railway Station"
- உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெண் ஒருவர் ஆச்சரியத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைகளுக்காக சண்டை போடுவது, கவர்ச்சியாக உடை அணிந்து செல்வது, இளம் ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தது. ஆனால் தற்போது வைரலாகும் வீடியோவில், டெல்லி மெட்ரோவின் ரோகிணி கிழக்கு ரெயில் நிலையத்தில் சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்களுக்கு பதிலாக உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதில், 3 பெரிய கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட இந்த எந்திரத்தில் பல்வேறு அளவுகளில் உள்ளாடைகள் அடுக்கி வைக்கப்பட்டு மின்னணு திரை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதனைப்பார்த்த பெண் ஒருவர் ஆச்சரியத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ வைரலாகி பார்வைகளை குவித்து வருகிறது. நெட்டிசன்கள் சிலர், அவசரத் தேவைகளுக்காகவும் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் போன்ற இக்கட்டான காலங்களில் இது போன்ற எந்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பதிவிட்டுள்ளனர். சில பயனர்கள், மெட்ரோ பயணத்தின்போது உள்ளாடைகளை வாங்குவது என்பது சற்று வினோதமான முயற்சி என்று பதிவிட்டுள்ளனர்.
- மெட்ரோ ரெயில் பெட்டிகளுக்குள் வீடியோக்களை படம் பிடிக்க தடை விதித்தது.
- தடையை மீறி ஒரு பெண் மெட்ரோ ரெயிலிலும், நடைமேடையிலும் நடனமாடி உள்ளார்.
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் சமீபகாலமாக பயணிகளின் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு, பல்வேறு அறிவுரைகள் வழங்கிய பின்னரும், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து, மெட்ரோ ரெயில் பெட்டிகளுக்குள் வீடியோக்களை படம் பிடிக்க தடை விதித்தது. இந்நிலையில், தடையை மீறி ஒரு பெண் மெட்ரோ ரெயிலிலும், நடைமேடையிலும் நடனமாடி உள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
அதில், இளஞ்சிவப்பு நிற க்ராப் டாப் மற்றும் பிரவுன் நிற பாவாடை அணிந்த பெண் ரெயில் நிலைய நடைமேடையில் ஒரு இந்தி பாடலுக்கு நடனமாடும் காட்சிகள் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பொதுஇடத்தில் இப்படி ஆட எவ்வளவு தைரியம் வேண்டும் என ஒருவரும், விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர். டெல்லி மெட்ரோ நிர்வாகம் இத்தகைய நபர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? அவர்கள் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், மெட்ரோ சேவையை இழிவுபடுத்துகிறார்கள் என்று ஒரு பயனர் காட்டமாக பதிவிட்டுள்ளார்.






