என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: டீயில் வாழைப்பழத்தை தொட்டு சாப்பிட்ட வாலிபர்- சக பயணிகளின் ரியாக்ஷன்
    X

    VIDEO: டீயில் வாழைப்பழத்தை தொட்டு சாப்பிட்ட வாலிபர்- சக பயணிகளின் ரியாக்ஷன்

    • பெரிய கத்திரிக்கா, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிட்டார்.
    • பலரும் நகைச்சுவை கருத்துகளை பதிவிட்டனர்.

    சமூக வலைதளங்களில் எப்படியாவது பிரபலமடைந்து விடவேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் அதிகரித்து வருகிறது. அதற்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு பலர் சென்றுவிடுகிறார்கள். அதற்கு திருத்தணி தாக்குதல் சம்பவம் ஒரு உதாரணம்.

    அதற்கு நேர்மாறாக முற்றிலும் வேடிக்கையாக, ஒருவர் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் அந்த வாலிபர். திடீரென அவர் பையில் இருந்து தக்காளி சாஸ் பாக்கெட்டை எடுக்கிறார். அவர் ஏதோ சிற்றுண்டி சாப்பிடப் போகிறார் என்று சக பயணிகள் நினைத்தபோது அவர் முழு இஞ்சியை எடுத்து அதில் சாஸை ஊற்றி சாப்பிட்டார். அடுத்து ஒரு டீயை வாங்கியவர் அதில் வாழைப்பழத்தை தொட்டு சாப்பிட்டார். அதேபோல் பெரிய கத்திரிக்கா, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிட்டார். இதனால் சக பயணிகள் அவரை வியப்புடன் பார்த்தனர். சிலர் சற்று முகம் சுளித்தனர்.

    சமூக வலைதளங்களில் வெளியான அவரது வீடியோ, லட்சக்கணக்கானோரின் பார்வைகளையும், விருப்பங்களையும் பெற்றது. பலரும் நகைச்சுவை கருத்துகளை பதிவிட்டனர்.



    Next Story
    ×