என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PoliceInvestigation"

    • விபத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருச்சி:

    சென்னையிலிருந்து கம்பம் நோக்கி ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 34 பயணிகள் இருந்தனர். பஸ்சை கம்பம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் இன்று (செவ்வாய்க்கிழமை)அதிகாலை 5.40 மணியளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த போது விபத்தில் சிக்கியது.

    முன்னால் தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த சந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 60) பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பேரன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர்.

    இந்த விபத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் இறந்த சந்திரன் மற்றும் பழனியம்மாள் உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 12 பயணிகளை ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்த இடத்தில் உதவி போலீஸ் கமிஷனர் ஜெயசீலன் விசாரணை நடத்தினர். பின்னர் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான ஆம்னி பஸ் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    அதிக பாரம் காரணமாக லாரி மெதுவாக சென்ற நிலையில் அதிவேகமாக வந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    டிரைவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • வாலிபர் மரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் கிளம்பி வந்து கொண்டிருந்தது. இதில் முன்பதிவு இல்லாத பொது பெட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் பயணம் செய்து வந்து கொண்டிருந்தனர்.

    இந்த பொதுப் பெட்டியில் உள்ள கழிப்பறையில் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உள்ளே சென்றார். பின்னர் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை.

    கதவு நீண்ட நேரம் திறக்கவில்லை. பயணிகள் கதவை தட்டினாலும் பதில் இல்லை. அப்போது அந்த ரெயில் சேலத்தைத் தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனை அடுத்து இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார் நிலையில் இருந்தனர்.

    பின்னர், அந்த ரெயில் ஈரோடு இரண்டாவது நடைமேடையில் வந்து நின்றது. அங்கு தயாராக இருந்த ஈரோடு ரெயில்வே போலீசார் கழிப்பறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அந்த நபர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த நபர் எப்படி இறந்தார் என தெரியவில்லை. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இறந்த நபர் சந்தன கலர் முழுக்கை ரவுண்ட் நெக் பனியன் அணிந்திருந்தார். ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிதிருந்தார். நெற்றியின் வலது பக்கம் ஒரு கருப்பு மச்சம் இருந்தது. வலது கால் முட்டியில் ஒரு கருப்பு மச்சம் உள்ளது. வலது தொடையின் வெளிப்புறத்தில் ஒரு காய தழும்பு உள்ளது.

    மேலும், அந்த நபரின் சட்டை பையில் ரெயில்வே பிளாட்பாரம் டிக்கெட் இருந்தது. மற்றபடி எந்த ஒரு பொருட்களும் பைகளும் சிக்கவில்லை. அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×