என் மலர்
நீங்கள் தேடியது "Trichy accident"
- தனியார் பஞ்சாலைக்கு சொந்தமான பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது.
- விபத்து நடந்து பெண் பக்தர் இறந்து கிடந்தும் போலீசார் நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த மற்ற பக்தர்கள் தேசியநெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
இதில் ஒரு குழுவினர் இன்று காலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த ஆசாத் ரோடு அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த தனியார் பஞ்சாலைக்கு சொந்தமான பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது. இதில் கும்பகோணம் துக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த உமாராணி (வயது 60) தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் மாதேஸ்வரி (65), சிவகாமி (55), மூக்காயி (65) உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை உடன் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து நடந்து பெண் பக்தர் இறந்து கிடந்தும் போலீசார் நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த மற்ற பக்தர்கள் தேசியநெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் ஆத்திரம் அடைந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆலையின் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தைக்கு பின் பக்தர்கள் மறியலை கைவிட்டனர்.
பின்னர் இறந்தவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து மற்றும் சாலை மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள காளவாய்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் சாரதி (வயது 15). திருவெள்ளறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளிக்கு விடுமுறை நாளாகும்.
இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் சாரதியின் அண்ணன் சுபாஸ் (29), அவரது நண்பர் சரத் (27) ஆகியோருடன் சாரதி ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திருவெள்ளறையில் இருந்து மண்ணச்சநல்லூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு புறப்பட்டனர். அவர்கள் மண்ணச்சநல்லூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
சாரதி இருசக்கர வாகனத்தின் நடுவில் அமர்ந்திருந்தார். அவரது அண்ணன் சுபாஸ் வாகனத்தை ஓட்டினார். திருவெள்ளறை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது.
இதில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்தனர். அடுத்த விநாடி அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய சாரதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இன்று காலை நடந்த இந்த விபத்து பலியான சாரதியின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விபத்து பற்றிய தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வையம்பட்டி போலீசார் காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வழியிலேயே தியாகராஜனின் மைத்துனர் மகன் புகழேந்தியும் இறந்தான். குழந்தை அனுஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 41). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இவர் மகள் அனுஸ்ரீ (3) மற்றும் வையம்பட்டி காமாட்சியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் மைத்துனர் மகேஷ் என்பவரது மகன் புகழேந்தி (2) ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரையும் சிகிச்சைக்காக வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது மொபட்டில் இன்று காலை அழைத்து சென்றார். அப்போது ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உள்ள பிரிவு சாலையில் திரும்புவதற்காக தேசிய நெடுச்சாலையில் சென்ற அவர் தனது மொபட்டை நிறுத்தினார். அப்போது கொடைக்கானலில் இருந்து சென்னை நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற சொகுசு கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மொபட்டில் அமர்ந்திருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் தியாகராஜன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். குழந்தைகளான அனுஸ்ரீ, புகழேந்தி ஆகிய இருவரும் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.
விபத்து பற்றிய தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வையம்பட்டி போலீசார் காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே தியாகராஜனின் மைத்துனர் மகன் புகழேந்தியும் இறந்தான். குழந்தை அனுஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் விபத்தை ஏற்படுத்தியதாக சொகுசு கார் டிரைவரான சென்னை அடையாறு காந்திநகர் பகுதியை சேர்ந்த இக்னேஷியஸ் விவேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் துறையூரை அருகே உள்ள காளிப்பட்டியை சேர்ந்தவர் நடேசன் (வயது58) கூலி தொழிலாளி. இவர் துறையூரில் வேலையை முடித்து கொண்டு சைக்கிளில் பசும்புல் கட்டிக் கொண்டு துறையூர்-திருச்சி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது துறையூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாரதவிதமாக நடேசன் சென்ற சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். சைக்கிள் அருகில் உள்ள தோட்டத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
முசிறி:
சேலம் புதூர்சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45). இவர் பார்சல் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் சேலத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார்.
இன்று காலை திருச்சி மாவட்டம் முசிறி சுடுகாட்டுத் துறை பகுதியில் செல்லும் போது, அந்த வழியாக தொட்டியம் அரங்கூர் கிளிஞ்சாநத்தம் நடுத்தெருவை சேர்ந்த சக்திரசேகர்(32) என்பவர் ஓட்டிச்சென்ற லாரியும், ராஜசேகர் லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
உடனே அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜசேகர் இறந்தார். சந்திர சேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.