என் மலர்tooltip icon

    செய்திகள்

    துறையூர் அருகே பஸ் மோதி தொழிலாளி பலி
    X

    துறையூர் அருகே பஸ் மோதி தொழிலாளி பலி

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூரை  அருகே  உள்ள காளிப்பட்டியை சேர்ந்தவர் நடேசன் (வயது58) கூலி தொழிலாளி.  இவர் துறையூரில் வேலையை முடித்து கொண்டு சைக்கிளில் பசும்புல்  கட்டிக் கொண்டு துறையூர்-திருச்சி  சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது துறையூரில் இருந்து  திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாரதவிதமாக நடேசன் சென்ற சைக்கிளில் மோதியதாக  கூறப்படுகிறது. இந்த விபத்தில் நடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். சைக்கிள் அருகில் உள்ள தோட்டத்திற்கு தூக்கி வீசப்பட்டது.

    இது குறித்து  தகவல் அறிந்ததும் துறையூர் போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகிறார்கள். 
    Next Story
    ×