என் மலர்
நீங்கள் தேடியது "AC compartments"
- அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க பாடுபட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தில் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.
இதனையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டு அணைத்து பயணிகளும் உடனடியாக வெளியற்றப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தினால் ஒரு பெண் பயணிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
சேலம் வழியாக செல்லும் கோவா ரெயிலில் கூடுதலாக ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
சேலம்:
கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம், ஈரோடு, கரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி நேற்று கூடுதல் ஏ.சி. பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட்டது. வருகிற ஜூன் மாதம் 27ந் தேதி வரை தற்காலிகமாக இயக்கப்படும். இதேபோல் மறு மார்க்கத்தில் செல்லும் வேளாங்கண்ணி- வாஸ்கோடகாமா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 17316) கூடுதலாக 2 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டு நாளை முதல் வருகிற ஜூன் மாதம் 28ந் தேதி தற்காலிகமாக இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.