என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stomach ache"

    • சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவில் தான் வாயு இருக்கும்.
    • தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

    வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிற்றில் அழுத்தம், வீக்கம் என்பது பொதுவான ஒரு இரைப்பை குடல் நோய் அறிகுறியாகும். வயிற்றில் உள்ள அமிலச் சுரப்பு அதிகரிக்கும் போது குடலில் உள்ள வாய்வுவின் அழுத்தமும் அதிகரித்து வாய்வுப் பிரச்சனை, வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது.


    காரணங்கள்:

    உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும் போது, நம்மை அறியாமலே காற்றையும் விழுங்கி விடுகிறோம்.

    குடலில் உணவு செரிக்கும் போது, அங்கு இயல்பாகவே இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயல் மூலம் வேதி மாற்றங்களை நிகழ்த்தும் போது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்ற பல வாயுக்கள் உற்பத்தியாகின்றன.


    தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேறுகிறது.

    சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவில் தான் வாயு இருக்கும். இவை ஏப்பம் மூலமாக வாய் வழியாக அல்லது ஆசனவாய் வழியாக வெளியேறி விடும். சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது.

    ஆனால் குடலில் 'பெப்சின்' போன்ற என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டன் போன்ற வாயுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.


    பொதுவாக வயிற்றிலுள்ள ஹைட்ரஜனும், மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் சத்தமே இல்லாமல் வாயு வெளியேறும். ஆனால் இந்த கலவை அதிகமாகிவிட்டால் பக்கத்தில் உள்ளவர்கள் அதிரும் படியான சத்தம் கேட்கும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை.

    தீர்வுகள்:

    மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் இவைகளை வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு எடுப்பது நல்லது.

    தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சீரகம் உடலின் அக உறுப்புகளை சீராக்கி, உடலைப் பலப்படுத்தும். சீரகத் தண்ணீர் தினமும் காலை, மாலை வேளைகளில் இளஞ்சூட்டில் குடித்து வந்தால் வாயுப் பிரச்சினை குறையும்.

    சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்து, தேவையானபோது சுடு சோற்றில் உப்பு சேர்த்து நெய் விட்டு சாப்பிட வாயுப் பிரச்சினை நீங்கும். மோரில் வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம்.

    வயிற்றுப் பொருமலுக்கு ஓமத் தண்ணீர் ஒரு அருமருந்து, பெரியவர்கள் 5-10 மி.லி. சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.

    பழைய சாதத்தில் சின்ன வெங்காயம், இஞ்சித் துண்டு, மோர், கறிவேப்பிலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கு, நன்மை பயக்கும் பாக்டீரியாக்களான லேக்டோபேசில்லஸ், பிபிடோபாக்டீரியா, சக்காரோமைசஸ் இவைகள் சீரான அளவில் குடலில் இருந்து ஏராளமான நன்மைகள் செய்யும்.

    தண்ணீரை அண்ணாந்து குடிக்காமல் உதட்டில் வைத்து குடிக்க வேண்டும். உணவை அவசரப்படாமல் நன்கு மென்று சாப்பிட வேண்டும். காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவு கடுக்காய் இவைகளை முறையாக எடுத்து வந்தால் செரிமான மண்டல பிரச்சினைகள் சீராகி, வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் நீங்கும், மலச்சிக்கல் இராது.

    • விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியம் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 60. விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததன் காரணமாக கடந்த சம்பவத்தன்று தாங்க முடியாமல் வயிற்று வலி ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

    • பூபதிக்கு அடிக்கடி தீராத வயிறு வலி பிரசினை இருந்துள்ளது.
    • பூபதியை சிகிச்சைக்காக சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வீர பயங்கரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி (வயது 60) விவசாயி. இவரது மகன் சக்தி. பூபதிக்கு அடிக்கடி தீராத வயிறு வலி பிரசினை இருந்துள்ளது. இதனால் மது குடிக்கும்பழக்கத்திற்கு ஆளானார். இதனையடுத்து கடந்த 12-ம் தேதி சக்தி வேலைக்குச் சென்று விடடார். பின்னர் வீட்டிலிருந்த பூபதி வயிறு வலி அதிகமானதால் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மாலை சக்தி வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து தந்தை பூபதியை சிகிச்சைக்காக சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பூபதி நேற்று இறந்தார். இதுகுறித்து சக்தி கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணின் எடை 49 கிலோ. 15 கிலோ எடை கொண்ட கட்டியை உள்ளே சுமந்து இருந்தார்.
    • கட்டி வெடிக்கும் நிலையில் இருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுரை.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் அஷ்டா என்கிற நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இதையடுத்து அந்த பெண் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் என்கிற மருத்துவமனையை அணுகி மருத்துவர்களிடம் வயிற்று வலி குறித்து கூறியுள்ளார்.

    வயிறு மிகவும் வீக்கத்துடன் இருந்ததால் மருத்துவர்கள் பெண்ணுக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து பின்னர், கருப்பையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.

    மேலும், கட்டி வெடிக்கும் நிலையில் இருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

    இதையடுத்து, பெண் மற்றும் அவரது வீட்டாரின் சம்மதத்துடன், சுமார் 12 மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.

    பின்னர், அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர்.

    அறுவைசிகிச்சை குழுவைச் சேர்ந்த மருத்துவர் அதுல் வியாஸ் கூறுகையில், " பெண்ணின் எடை 49 கிலோ. 15 கிலோ எடை கொண்ட கட்டியை உள்ளே சுமந்து இருந்தார்.

    கட்டி மிகப்பெரியதாக இருந்ததால், நோயாளிக்கு உணவு சாப்பிடும் போதும், நடக்கும்போதும் சிரமம் ஏற்படும் என்பதால், மருத்துவ நடைமுறையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அறுவை சிகிச்சையின் போது குழு மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. ஏனெனில் அறுவை சிகிச்சையின்போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் ஆபத்தாகிவிடும். கட்டி பல நரம்புகளுடன் இணைந்திருந்ததால், மருத்துவர்கள் நுட்பமாக கையாள வேண்டியிருந்தது. பெண் இப்போது நலமாக உள்ளார்" என்றார்.

    மேலும், இது மிகப்பெரிய சாதனை என்று மருத்துவமனையின் தலைவர் சுரேஷ்சிங் பதூரியா மற்றும் துணைத் தலைவர் மயங்க்ராஜ் சிங் பதூரியா ஆகியோர் மருத்துவர்களின் முயற்சியைப் பாராட்டினர்.

    • அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
    • சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சின்ன ஜமக்கா, மகன்கள் ராமகிருஷ்ணா (வயது 11), விஜய் (6).

    நேற்று முன் தினம் இரவு தனது மகன்களுடன் ஊரில் உள்ள ஒரு பானி பூரி கடைக்கு சென்றனர். தந்தை வாங்கி கொடுத்த பானி பூரியை சாப்பிட்டுவிட்டு சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தூங்கினர்.

    நேற்று அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

    அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அங்கிருந்து ராஜமகேந்திராவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு விஜய் இறந்தார்.

    இதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில், மூத்த மகன், ராமகிருஷ்ணனுக்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. ஏலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், வழியிலேயே அவர் இறந்தார். பானி பூரி சாப்பிட்டதால் மகன்கள் இறந்ததாக பெற்றோர்கள் கூறினர்.

    தூங்கும் போது ஏதேனும் விஷ பூச்சி கடித்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இரவில் வீட்டில் சாப்பிட்ட உணவு, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடும் வயிறு வலி ஏற்பட்டதாக கூறி ரெயிலில் உருண்டு புரண்டு துடித்தார்.
    • சக பயணிகள் பரிதாபப்பட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர்.

    அரக்கோணம்:

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீராஜ்குமார். இவர் பெங்களூரு செல்வதற்காக பீகாரில் இருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

    ரெயில் பெரம்பூர் வந்த போது அவருக்கு பல்வலி ஏற்பட்டது. சரியாக உணவு சாப்பிட முடியவில்லை. பல்வலி என்றால் சிகிச்சை அளிக்க மாட்டார்கள். வயிறு வலி என கூறினால் உடனடி சிகிச்சை கிடைக்கும் என நினைத்தார்.

    தனக்கு கடும் வயிறு வலி ஏற்பட்டதாக கூறி ரெயிலில் உருண்டு புரண்டு துடித்தார். வலி தாங்க முடியாதவர் போல் நடித்து அட்டகாசம் செய்தார். சக பயணிகள் பரிதாப பட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர்.

    மேலும் அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே நிலைய மேலாளர் அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனை டாக்டர்கள், உதவியாளர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை என குழுக்களாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

    ரெயிலில் பயணம் செய்பவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி நடைமேடை 1-ல் அனுமதித்து ரெயிலை நிறுத்தினர்.

    தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் நீராஜ்குமாரை வெளியே அழைத்து வந்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில் நீராஜ் குமார் வயிற்றை காண்பிக்காமல் வாயை திறந்து பல்வலி என கூறினார்.

    இதனை பார்த்து ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வயிற்று வலிக்கான மாத்திரை மருந்துகளை தயார் நிலையில் வைத்திருந்த நிலையில் பல் வலி என கூறியதால் ரெயில்வே டாக்டர்கள் கடிந்து கொண்டனர். பல் வலிக்கான மாத்திரையை வழங்கினர்.

    மேலும் அந்த நபரை இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனக் கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதனால் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருவெண்ணைநல்லூர் அருகே குருணை மருந்து குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டில் இருந்த குருணை மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

    விழுப்புரம் :

    திருவெண்ணைநல்லூர் அருகே கடுத்தாட்கொண்டூர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. அவரது மனைவி ஜெயந்தி (வயது 38). இவருக்கு முன்னதாகவே தீராத வயிற்று வலி இருந்தது. நேற்று ஜெயந்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மன உளைச்சலில் இருந்த ஜெயந்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குருணை மருந்து எடுத்து குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்தார். இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஜெயந்தி இறந்தார்.

    இதுகுறித்து திரு வெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெ க்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று திருவெண்ணை நல்லூர் அருகே கொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (24) இவர் விழுப்புரம் ஸ்ரீராம் பைனான்சில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது 10 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவருக்கும் வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டில் இருந்த குருணை மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வெங்கடேசன் இறந்தார். இதுகுறித்து வெங்க டேசன் மனைவி சத்யா திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன், தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    பரமத்தி வேலூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கல்லூரி மாணவியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் மேனகா (வயது 20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மேனகாவை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். புகாரின் பேரில் பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 21-வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நேற்று மாலையில் வீட்டில் இருந்த பிரியா திடீர் என்று வி‌ஷத்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பிரியா இறந்தார்.

    இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் பிரியாவின் தந்தை ரங்கன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரியாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது.

    இதற்கு அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×