சின்னசேலம் அருகே விஷம் குடித்து விவசாயி சாவு

பூபதிக்கு அடிக்கடி தீராத வயிறு வலி பிரசினை இருந்துள்ளது. பூபதியை சிகிச்சைக்காக சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சின்னசேலம் அருகே விஷம் குடித்து விவசாயி சாவு
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வீர பயங்கரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி (வயது 60) விவசாயி. இவரது மகன் சக்தி. பூபதிக்கு அடிக்கடி தீராத வயிறு வலி பிரசினை இருந்துள்ளது. இதனால் மது குடிக்கும்பழக்கத்திற்கு ஆளானார். இதனையடுத்து கடந்த 12-ம் தேதி சக்தி வேலைக்குச் சென்று விடடார். பின்னர் வீட்டிலிருந்த பூபதி வயிறு வலி அதிகமானதால் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மாலை சக்தி வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து தந்தை பூபதியை சிகிச்சைக்காக சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பூபதி நேற்று இறந்தார். இதுகுறித்து சக்தி கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com