என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக மச்சிலிப்பட்டினம்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்
- கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பர் 7, 14, 21, ஜனவரி 11, 18, 2026) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும்.
- பயணிகளின் வசதிக்காக ஆந்திரா மற்றும் கேரளா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (எண்.07103/07104) இயக்கப்படும் என கடப்பா ரெயில்வே முதுநிலை வணிக ஆய்வாளர் ஏ.ஜனார்தன் தெரிவித்துள்ளார் .
இந்த ரெயில் வெள்ளிக்கிழமைகளில் (டிசம்பர் 5, 12, 19 மற்றும் ஜனவரி 9, 16, 2026) காலை 11 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தில் இருந்து புறப்படும். அதிகாலை 3.25 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும்.
இது அதே நாளில் இரவு 10 மணிக்கு காட்பாடி, ஜோலர்பேட்டை வழியாக கொல்லத்தை அடையும். கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பர் 7, 14, 21, ஜனவரி 11, 18, 2026) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும். அதே நாளில் இரவு 9.50 மணிக்கு ரேணிகுண்டாவையும், 10.36 மணிக்கு கோடூரையும், 11.08 மணிக்கு ராஜம்பேட்டையையும், 11.53 மணிக்கு கடப்பாவையும் சென்றடையும்.
இது நள்ளிரவு 12.28 மணிக்கு எர்ரகுன்லாவையும், மதியம் 12.53 மணிக்கு புரோட்டாத்தூரையும் சென்றடையும். பயணிகளின் வசதிக்காக ஆந்திரா மற்றும் கேரளா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.






