என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foggy weather"

    • ஆனந்த் விகார் பகுதியில் 457க்கு மேல் தாண்டி அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
    • டெல்லியில் இன்று காலை மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது.

    தலைநகர் டெல்லியில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் 'அபாயகரமான' (Hazardous) நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று மாசு, தற்போது கடும் பனிமூட்டம் மற்றும் குறைவான காற்று வேகம் காரணமாக மீண்டும் அதிகரித்துள்ளது.

    தலைநகர் டெல்லியில் நச்சுப்புகை அதிகரித்த நிலையில் காற்றின் தரக்குறியீடு (AQ) 459 என்ற மிக மோசமான அளவு பதிவானது.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

    டெல்லியிலிருந்து சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் ரத்தானதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    மேலும், டெல்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கான ரெயில் சேவை கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    • லெவல் கிராசிங் பகுதிகளில் எல்இடி பல்புகள் பொருத்தப்படுகின்றன.
    • ரெயில்களை 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடிவு.

    வட மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், இரவு வேளைகள் மற்றும் அதிகாலை வேளைகளில் காணப்படும் மூடுபனியின்போது ரெயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரெயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பனி படர்வை நீக்கும் கருவிகளை ரெயில் இஞ்சின்களில் பொருத்துவது, அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துவது, தண்டவாளங்களுக்கு அருகில் வெள்ளை நிற கோடுகளை போடுவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.

    லெவல் கிராசிங் பகுதிகளில் விசில் எழுப்பக் கூடிய கருவிகள் மற்றும் எல்இடி பல்புகளை பொருத்துதல், சிக்மா வடிவிலான சிக்னல் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் ரெயில்களை 60 கிலோ மீட்டரிலிருந்து 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    ×