என் மலர்
இந்தியா

ரெயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய மாற்றம்.. அக்டோபர் 1 முதல் அமல்
- அவர்களால் மட்டுமே அந்த நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியும்.
- இந்த நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும்.
ரெயில் டிக்கெட் முன்பதிவு முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மோசடியைத் தடுக்கவும் ரெயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அக்டோபர் 1, 2025 முதல், பொது முன்பதிவு திறந்த முதல் 15 நிமிடங்களில் டிக்கெட் பதிவு செய்வோர் ஆதாரை கட்டாயமாக இணைந்திருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே அந்த இடைப்பட்ட நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியும்.
தற்போது, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமாகும். இப்போது இந்தக் கொள்கை பொது ஒதுக்கீட்டு டிக்கெட்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, நவம்பர் 15 ஆம் தேதி பயணிக்க பொதிகை எக்ஸ்பிரஸில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பினால், விதிகளின்படி, முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே, அதாவது செப்டம்பர் 16 காலை 8 மணிக்கு தொடங்கும். புதிய விதியின்படி, ஆதார் சரிபார்ப்பை முடித்த IRCTC பயனர்கள் மட்டுமே 8.00 முதல் 8:15 வரை, அதாவது முதல் 15 நிமிடங்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
ஆதார் இணைப்பு இல்லாத வாடிக்கையாளர்கள் அந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது. இந்த நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், சரிபார்க்கப்பட்ட பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.






