என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் முன்பதிவு"

    • முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே இந்த விதியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
    • அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள முன்பதிவு கவுன்டர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    முன்பதிவு கவுன்டர்களில் வாங்கப்படும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP கடவுச்சொல்லை ரெயில்வே கட்டாயமாக்கவுள்ளது.

    முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே இந்த விதியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    OTP அடிப்படையிலான தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை நவம்பர் 17 முதல் ஒரு சில ரெயில் நிலையங்களின் முன்பதிவு கவுன்டர்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த முறையை அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள முன்பதிவு கவுன்டர்களுக்கு விரிவுபடுத்தத் தயாராகி வருவதாக ரெயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    எனவே இனிமேல், கவுன்டர்களில் முன்பதிவு படிவத்தை நிரப்பிய பிறகு, முன்பதிவு செய்யும் போது மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடுவதன் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். 

    • பெருநகரங்களில் ஒரு மாதத்தில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் மட்டுமே கிடைக்கும்
    • காத்திருப்பு(வெயிட்டிங் லிஸ்ட்) டிக்கெட்டுகள் பொதுப் பெட்டிகளில் மட்டுமே செல்லுபடியாகும்.

    நாளை மே 1 முதல் வங்கிக் கணக்கு முதல் ஏடிஎம் பரிவர்த்தனைகள், சமையல் ஏரிவாயு வரை பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.

    ஏடிஎம் கட்டணங்கள்

    மே 1, 2025 முதல், பெருநகரங்களில் ஒரு மாதத்தில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் மட்டுமே கிடைக்கும். மற்ற நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ. 23 மற்றும் வரி செலுத்த வேண்டும். முன்னதாக இந்தக் கட்டணம் ரூ.21 ஆக இருந்தது. இது தவிர, நீங்கள் இருப்பைச் சரிபார்த்தால், இதற்கும் ரூ.7 கட்டணம் செலுத்த வேண்டும், முன்பு கட்டணம் ரூ.6 ஆக இருந்தது.

    ரெயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றங்கள்

    மே 1, 2025 முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றங்கள் இருக்கும். பயணிகள் புதிய முறையின்படி, இனிமேல், காத்திருப்பு(வெயிட்டிங் லிஸ்ட்) டிக்கெட்டுகள் பொதுப் பெட்டிகளில் மட்டுமே செல்லுபடியாகும். ஸ்லீப்பர், ஏசி கோச் பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட்டுடன் பயணிக்க முடியாது. இது தவிர, முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம்

    ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர் விலைகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இந்த முறையும், எரிவாயு சிலிண்டரின் விலை மே 1 ஆம் தேதி மறுஆய்வு செய்யப்படும். அதன்படி விலை ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கும்.

    வட்டி விகிதங்களில் மாற்றங்கள்

    மே 1 முதல் FD (நிலையான வைப்பு நிதி) மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த ஆண்டில் தொடர்ச்சியாக 2 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை இரண்டு முறை குறைத்தது. இதன் விளைவாக பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்குகள் மற்றும் FDகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. 

    • ரெயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.
    • பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை மாலையில் ஜனவரி12-ந்தேதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை (செப்.13) முதல் விரைவு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    அடுத்த ஆண்டு ஜன. 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ந் தேதி பொங்கல், 16-ந் தேதி மாட்டுப் பொங்கல், 17-ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (செப்.13) முதல் தொடங்குகிறது.

    ரெயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. அந்த வகையில், ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்ய நாளையும், ஜனவரி 12-ந்தேதிக்கு செப்.14-ந்தேதியிலும், ஜனவரி 13-ந்தேதிக்கு செப்.15-ந்தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். எனவே, பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை மாலையில் ஜனவரி 12-ந்தேதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், முன்கூட்டியே சிலர் பொங்கலுக்கு ஊருக்கு செல்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தீபாவளிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வாய்ப்புள்ள விரைவு ரெயில்களில் ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இயக்கவும் முடிவு செய்துள்ளோம்'' என்றனர்.

    • தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில்களில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கிவிடும்.
    • ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், பஸ் மற்றும் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். எனவே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களும், ரெயில்களும் இயக்கப்படும்.

    இதேபோல, தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில்களில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கிவிடும். அந்தவகையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகிப்பண்டிகை, 15-ந்தேதி பொங்கல் பண்டிகை, 16-ந்தேதி மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அதாவது ஜனவரி 11-ந்தேதி ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்றும், ஜனவரி 12-ந்தேதி பயணம் செய்ய நாளையும் (14-ந்தேதி), ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய 15-ந்தேதியும், ஜனவரி 14-ந்தேதி பயணம் செய்பவர்கள் 16-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம்.

    • இரண்டாம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்றன.
    • நெல்லை, அனந்தபுரி உள்ளிட்ட ரெயில்களில் 2-ம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் விற்று முடிந்தன.

    சென்னை:

    அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி (ஞாயிறு) போகி பண்டிகை தொடங்கி, 15-ந்தேதி பொங்கல் பண்டிகை, 16-ந்தேதி மாட்டுப் பொங்கல், 17-ந்தேதி காணும் பெங்கல் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. இன்று முன்பதிவு செய்வோர் ஜனவரி 11-ந்தேதி பயணம் செய்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 120 நாட்களுக்கு முன்பாக பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு டிக்கெட் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பாகவே ஏராளமானோர் மையங்களில் திரண்டிருந்தனர்.

    மையங்கள் திறக்கப்பட்டவுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதேபோல் இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலானோர் இணையதளங்களில் முன்பதிவு செய்தனர். டிக்கெட் கவுண்டர்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் கூட்டம் இருந்தது.

    பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

    இரண்டாம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்றன. குறிப்பாக தென்மாவட்ட ரெயில்கள், கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

    நெல்லை, அனந்தபுரி உள்ளிட்ட ரெயில்களில் 2-ம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் விற்று முடிந்தன. ஏ.சி. வகுப்பு டிக்கெட் மட்டும் சில இருந்தன. ஜனவரி 12-ந்தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடும்.

    • 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.
    • 7 நிமிடங்களில் ரெயில்களில் இடங்கள் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எத்தனை சிறப்பு ரெயில்கள் அறிவித்தாலும் அவை அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

    குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு விடப்பட்ட சிறப்பு ரெயில்கள் கோடை விடுமுறைக்கு பிறகும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

    வழக்கமாக இயக்கப்படும் ரெயில்கள் எப்போதும் முழு அளவில் செல்கின்றன.ரெயில்களில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய திட்டமிட்ட முன்பதிவு தான் சிறந்ததாக உள்ளது.

    ரெயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமின்றி வசதியாகவும், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதாலும் சாதாரண முன்பதிவு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் தட்கல் மூலம் கூடுதலாக கட்டணம் செலுத்தி பயணம் செய்யவும் மக்கள் தயாராக உள்ளனர்.

    இந்த நிலையில் ரெயில் பயணத்தை திட்டமிட்டு தொடர வசதியாக 4 மாதங்களுக்கு முன்னதாக அதாவது 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.

    பண்டிகை காலங்கள், விசேஷ நாட்களை கணக்கிட்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணத்தை மக்கள் தொடர்கின்றனர்.

    இந்த நிலையில் ஆயுத பூஜை அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெள்ளிக்கிழமையும், அதற்கு மறுநாள் 12-ந் தேதி (சனிக்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.

    எனவே 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொது மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.

    ஆயுத பூஜை விடுமுறைக்காக அக்டோபர் 9-ந் தேதி (புதன்கிழமை) பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. அக்டோபர் 10-ந் தேதி வியாழக்கிழமை ஊருக்கு புறப்பட்டு செல்பவர்கள் நாளை (12-ந் தேதி) வேண்டும். ஆயுத பூஜை நாளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    அதன்படி அக்டோபர் 9-ந் தேதி பயணத்தின் 3 நாட்கள் தொடர் விடுமுறையை கழிக்க விருபுபவர்கள் இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்ய காத்து நின்றனர்.

    சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், அடையாறு, அண்ணாநகர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்பதிவு மையங்களில் குறைந்த அளவில் மக்கள் வரிசையில் நின்றனர்.

    இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பெரும்பாலும் டிக்கெட் கவுண்டர்களுக்கு வருவது இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்து பயணத்தை உறுதி செய்து விடுகின்றனர்.

    அதன்படி முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இடங்கள் நிரம்பி விட்டன. கவுண்டர்களில் வரிசையில் நின்ற சிலருக்கு உறுதியான டிக்கெட் கிடைத்தது.

    7 நிமிடங்களில் தென்மாவட்ட ரெயில்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. ஒரு சில ரெயில்களில் ஏ.சி. வகுப்பு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, திருச்செந்தூர் மற்றும் கோவை திருவனந்தபுரம் பகுதிகளுக்கு செல்லும் வழக்கமான ரெயில்கள் அனைத்திலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பின.

    • பெரும்பாலானோர் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள்.
    • 16-ந்தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதில், பெரும்பாலானோர் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள்.

    பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 13-ந்தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க்கிழமை), 15-ந்தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை), 16-ந்தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ந்தேதி முதல் தொடங்குகிறது.

    அந்த வகையில், ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12-ந்தேதியும், ஜனவரி 11-ந் தேதிக்கு பயணம் செய்ய 13-ந்தேதியிலும், ஜனவரி 12-ந்தேதிக்கு வரும் 14-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

    ஜனவரி 13-ந்தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ந்தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

    ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

    • ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று காலை 8 மணிக்கு பொங்கல் பயணத்திற்கான ரெயில் முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது.
    • தென் மாவட்ட ரெயில்கள், மற்றும் சேலம், கோவை, திருப்பூர் மார்க்க ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. ஜனவரி மாதம் 14-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) பொங்கல் பண்டிகையும் 15-ந்தேதி (புதன் கிழமை) மாட்டு பொங்கல், 16-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை 13-ந்தேதி (திங்கட்கிழமை) வருகிறது.

    அரசு விடுமுறை தொடர்ச்சியாக வருவதால் பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே பயணத்தை திட்டமிடுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக உள்ள சனி, ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால் ஜனவரி 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் பொங்கல் பயணம் தொடங்குகிறது.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போகி பண்டிகை அன்று ஒரு நாள் விடுமுறை போட்டால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் முன்பதிவு செய்ய ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

    ரெயில் உறுதியான டிக்கெட் கிடைப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதால் 120 நாட்களுக்கு முன்பாக பயணத்தை திட்டமிட்டு இன்று முன்பதிவு செய்ய தொடங்கினர்.

    ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று காலை 8 மணிக்கு பொங்கல் பயணத்திற்கான ரெயில் முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. டிக்கெட் எடுப்பதற்கு சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அண்ணாநகர், பெரம்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்து நின்றனர்.

    ஒரு சிலர் அதிகாலை 5 மணிக்கே வந்து வரிசையில் நின்றனர். முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ரெயில்களின் அனைத்து இடங்களும் நிரம்பின.

    நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, முத்துநகர், பாண்டியன், தென்காசி, பொதிகை, திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் அனைத்தும் நிரம்பின.

    டிக்கெட் கவுண்டர்களில் வரிசையில் நின்ற ஒரு சிலருக்கே உறுதியான டிக்கெட் கிடைத்தது. மற்றவர்கள் காத்திரிப்போர் பட்டியலுடன் டிக்கெட்டை பெற்று சென்றனர்.

    ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் வழியாக பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்தவாறு முன்பதிவு செய்தனர். இதனால் கவுண்டர்களில் காத்து நின்றவர்களும் ஏமாற்றத்துடன் சென்றனர். தென் மாவட்ட ரெயில்கள், மற்றும் சேலம், கோவை, திருப்பூர் மார்க்க ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    ஏ.சி., 2-ம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளில் மட்டும் இடங்கள் காலியாக இருந்தன. ரெயிலில் கட்டணம் குறைவாக இருப்பதால் மட்டுமின்றி பாதுகாப்பாக செல்ல முடியும் என்பதால் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்.

    மேலும் ஜனவரி 11-ந்தேதி செல்ல விரும்புபவர்கள் நாளை (வெள்ளிக்கிழமையும், ஜனவரி 12-ந்தேதி பயணத்திற்கு வருகிற 14-ந்தேதியும் முன்பதிவு செய்ய தயாராக உள்ளனர்.

    பொங்கல் பயணத்திற்கான வந்தே பாரத் ரெயிலிலும் இடங்கள் நிரம்பி விட்டன. சென்னை-நாகர்கோவில், திருநெல்வேலி, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அனைத்து வந்தே பாரதம் ரெயில்களிலும் இடங்கள் இல்லை.

    • பொங்கல் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது.
    • இன்று ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14-ந் தேதி கொண்டாடப்பட்டு உள்ளது. இதையொட்டி தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வருவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே திட்டமிட்டு ரெயிலில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    ஜனவரி 10-ந் தேதி பயணம் செய்வதற்கு நேற்று முன்தினம் முன்பதிவு தொடங்கியது. சனி, ஞாயிறு அதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை வருவதால் வெளியூர் செல்பவர்களின் ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர்.

    பொங்கல் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டன.

    குறிப்பாக சென்னையில் இருந்து செல்லக்கூடிய தென் மாவட்ட ரெயில்களில் உயர் வகுப்பு படுக்கையை தவிர மற்ற இடங்கள் நிரம்பின.

    இந்த நிலையில் இன்று ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் உறுதியான டிக்கெட்டை எடுத்தனர். பொங்கலுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக பயணத்திற்கான இடங்கள் நிரம்பி விட்டன.

    நாளை (சனிக்கிழமை) ஜனவரி 12-ந் தேதி பயணத்திற்கான முன்பதிவு நடக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை மற்றும் கோவை மார்க்கமாக செல்லும் எல்லா ரெயில்களிலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் எல்லாம் நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்துவிட்டன.

    நாளை நடக்கும் முன்பதிவு இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொங்கலுக்கு முந்தைய 2 நாட்கள் பயணம் அதிகளவில் இருக்கும் என்பதால் 15, 16-ந் தேதிகளில் டிக்கெட் முன்பதிவு இதைவிட பலமடங்கு உயர வாய்ப்பு உள்ளது.

    • இந்திய ரெயில்வேயில் 120 நாட்கள் வரை பயணசீட்டு முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை இருந்தது.
    • பலரும் பண்டிகை காலங்களில் 3 மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து வந்தனர்.

    இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில்களில் பயணம் செய்கின்றனர். நீண்ட தூரம் ரெயில் பயணம் செய்பவர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே ரெயில்களில் பயணசீட்டை முன்பதிவு செய்து விடுவார்கள்.

    இந்திய ரெயில்வேயில் 120 நாட்கள் வரை பயணசீட்டு முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை இருந்தது. இதனால் பலரும் பண்டிகை காலங்களில் 3 மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து வந்தனர்.

    இந்நிலையில் ரெயில்களில் பயணசீட்டு முன்பதிவு செய்துகொள்ளும் காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக ரெயில்வே துறை குறைத்துள்ளது. அதே சமயம் பகல் நேரங்களில் இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய முறை நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. 

     

    • ரெயிலில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்து பயணிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
    • 60 நாட்கள் என்பது, எளிதாக அனைவருக்கும் மனதில் நிற்கக் கூடிய நாட்களாகும்.

    குனியமுத்தூர்:

    சென்னை, கோவை உள்பட பெரு நகரங்களில் தங்கியருக்கும் பெரும்பாலானோர் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    அவ்வாறு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான். இதற்காக ரெயிலில் முன்பதிவு செய்து விடுவார்கள்.

    இப்படி ஊருக்கு செல்வதற்கு ரெயிலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் 120 நாட்களுக்கு முன்பே அதாவது 4 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பயணிக்க முடியும் நிலை இருந்தது. பயணிகளும் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து, பயணித்து வந்தனர்.

    இந்த நிலையில், ரெயில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த நடைமுறையானது வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ரெயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து போத்தனூர் ரெயில் பயணிகள் சங்க பொதுச் செயலாளரும், சேலம் ரெயில்வே கோட்ட பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் கூறியதாவது:-

    ரெயிலில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்து பயணிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். பொதுவாக ரெயில் பயணம் செய்ய விரும்புவர்கள் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக்கிங் செய்து, பிளாக் செய்து விடுவதால், அவசர தேவைகளுக்காக செல்பவர்களுக்கு அது கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் ஏஜென்ட்கள் இதுபோன்று அதிகப்படியான டிக்கெட் புக்கிங் செய்து விட்டு, கடைசி நேரத்தில் அதனை கேன்சல் செய்து விடுவதும் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பயணிகள் மட்டுமே.

    மேலும் நீண்ட நாட்களுக்கு முன்பு புக்கிங் செய்யும்போது ஒரு சிலருக்கு மறதி ஏற்பட்டு, பயணிக்கும் நாட்களையும் தவற விடும் சூழலும் உள்ளது.

    தற்போது முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 60 நாட்களாக குறைக்கப்படும் என்ற ரெயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு வரவேற்க கூடியதாகும்.

    60 நாட்கள் என்பது, எளிதாக அனைவருக்கும் மனதில் நிற்கக் கூடிய நாட்களாகும். மேலும் தேவையற்றவர்கள் புக்கிங் செய்து வைத்திருப்பது குறையும். ரெயில்வே துறையின் இத்தகைய முடிவு ரெயில் பயணிகளுக்கு முற்றிலும் நன்மையே ஆகும். பயணிகள் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊருக்கு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான்.
    • ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னை, கோவை உள்பட பெரு நகரங்களில் தங்கியிருக்கும் பெரும்பாலானோர் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான். இதற்காக ரெயிலில் முன்பதிவு செய்து விடுவார்கள்.

    இப்படி ஊருக்கு செல்வதற்கு ரெயிலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் 120 நாட்களுக்கு முன்பே அதாவது 4 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பயணிக்க முடியும் நிலை இருந்தது. பயணிகளும் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து, பயணித்து வந்தனர்.

    ரெயில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    இந்த நடைமுறை நவம்பர் 1-ந்தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ரெயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

    ×