என் மலர்
இந்தியா

ATM கட்டணம் முதல் ரெயில் டிக்கெட் விதிகள் வரை.. நாளை முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
- பெருநகரங்களில் ஒரு மாதத்தில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் மட்டுமே கிடைக்கும்
- காத்திருப்பு(வெயிட்டிங் லிஸ்ட்) டிக்கெட்டுகள் பொதுப் பெட்டிகளில் மட்டுமே செல்லுபடியாகும்.
நாளை மே 1 முதல் வங்கிக் கணக்கு முதல் ஏடிஎம் பரிவர்த்தனைகள், சமையல் ஏரிவாயு வரை பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.
ஏடிஎம் கட்டணங்கள்
மே 1, 2025 முதல், பெருநகரங்களில் ஒரு மாதத்தில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் மட்டுமே கிடைக்கும். மற்ற நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ. 23 மற்றும் வரி செலுத்த வேண்டும். முன்னதாக இந்தக் கட்டணம் ரூ.21 ஆக இருந்தது. இது தவிர, நீங்கள் இருப்பைச் சரிபார்த்தால், இதற்கும் ரூ.7 கட்டணம் செலுத்த வேண்டும், முன்பு கட்டணம் ரூ.6 ஆக இருந்தது.
ரெயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றங்கள்
மே 1, 2025 முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றங்கள் இருக்கும். பயணிகள் புதிய முறையின்படி, இனிமேல், காத்திருப்பு(வெயிட்டிங் லிஸ்ட்) டிக்கெட்டுகள் பொதுப் பெட்டிகளில் மட்டுமே செல்லுபடியாகும். ஸ்லீப்பர், ஏசி கோச் பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட்டுடன் பயணிக்க முடியாது. இது தவிர, முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர் விலைகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இந்த முறையும், எரிவாயு சிலிண்டரின் விலை மே 1 ஆம் தேதி மறுஆய்வு செய்யப்படும். அதன்படி விலை ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கும்.
வட்டி விகிதங்களில் மாற்றங்கள்
மே 1 முதல் FD (நிலையான வைப்பு நிதி) மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த ஆண்டில் தொடர்ச்சியாக 2 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை இரண்டு முறை குறைத்தது. இதன் விளைவாக பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்குகள் மற்றும் FDகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.






