என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliamentary Standing Committees"

    • தூங்கும் வசதி இல்லாமல் அமர்ந்து கொண்டே பயணிக்கும் பயணிகளுக்கு இது பெரும் அநீதி.
    • ஒரு முழு பெர்த்தை இரண்டு பயணிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரயில்வே கூடுதல் வருமானம் ஈட்டுகிறது

    ரெயில்களில் RAC முறையில் பயணிக்கும் பயணிகளிடம் முழு பயணக் கட்டணத்தையும் வசூலிக்கும் இந்திய ரெயில்வேயின் நடைமுறைக்கு பாராளுமன்ற நிலைக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    முழு கட்டணத்தைச் செலுத்தியும், தூங்கும் வசதி இல்லாமல் அமர்ந்து கொண்டே பயணிக்கும் பயணிகளுக்கு இது பெரும் அநீதி என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.

    ஒரு முழு பெர்த்தை இரண்டு பயணிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரயில்வே கூடுதல் வருமானம் ஈட்டுகிறது, ஆனால் பயணிகளுக்கு உரிய வசதிகள் வழங்கப்படுவதில்லை. எனவே RAC பயணிகளிடம், முழு கட்டணத்தில் பாதியை திரும்ப வழங்க (Refund) வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.

    மேலும் RAC பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணத்திலும் சலுகை வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்களுக்குக் கட்டண ரீதியாக ஏதேனும் ஒரு பலன் கிடைக்க வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது.

    RAC நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்திற்கு நிலைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

    ரெயில்வே அமைச்சகம் இது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற நிலைக்குழு என்பது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை சிலரை உள்ளடக்கிய குழுவாகும். இது அரசின் கொள்கைகளை ஆராய்ந்து, தொடர்ந்து கண்காணிக்கும் பணியை செய்கிறது.   

    • நிலைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
    • சோனியா காந்தியின் பெயர் நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற வில்லை.

    புதுடெல்லி:

    பல்வேறு துறைகள் சார்ந்த பாராளுமன்ற நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவை செயலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற நிலைக்குழுக்கள் மற்றும் தலைவர்களின் விவரங்கள் வருமாறு:-

    நிதி-பா.ஜ.க. எம்.பி. பர்த்ருஹரி மஹதாப்

    வெளியுறவு-காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

    பாதுகாப்பு-முன்னாள் மத்திய மந்திரி ராதாமோகன் சிங்

    உள்துறை-பா.ஜ.க. எம்.பி. ராதா மோகன் தாஸ் அகர்வால்

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு-தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுனில் தத்தரே எரிசக்தி-சிவசேனை எம்.பி. ஸ்ரீரங் பர்னே

    போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரம்-ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா.

    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்-தெலுங்குதேசம் கட்சி எம்.பி. மாகுந்த்த ஸ்ரீநி வாசுலு ரெட்டி

    வேளாண், கால் நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல்-காங்கிரஸ் எம்.பி. சரண்ஜித் சிங் சன்னி

    கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்-காங்கிரஸ் எம்.பி.சப்தகிரி உலாகா.

    தொழில் நிறுவனங்கள்-தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா

    நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்-தி.மு.க. எம்.பி. கனிமொழி

    நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் உருக்கு-முன்னாள் மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர்

    நீர் வளங்கள்-பா.ஜ.க. எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி

    தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்-பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே.

    இதில், ராதா மோகன் சிங் தலைமையிலான பாதுகாப்புத் துறை சார்ந்த பாராளுமன்ற நிலைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.

    நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தியின் பெயர் எந்தவொரு நாடாளுமன்றக் குழுவிலும் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×