என் மலர்
இந்தியா

பட்டு சேலையில் பட்ஜெட் தாக்கல்... காஞ்சிபுரம் முதல் ஒடிசா வரை - ஸ்பெஷல் கவனம் செலுத்தும் நிர்மலா சீதாராமன்
- நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போது கையால் நெய்யப்பட்ட புடவைகளை அணிவதை பராம்பரியமாக கடைப்பிடித்து வருகிறார்.
- காஞ்சிபுரம் புடவைகள் இந்தியாவில் மிகவும் பிரபலமான கைத்தறிகளில் ஒன்றாகும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மேலும் ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலக்கட்டங்களில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்களை (9 முறை) தாக்கல் செய்தவர் என்ற சாதனையை நிர்மலா சீதாராமன் தற்போது எட்டுகிறார்.
இதனிடையே, தமிழ்நாட்டை சேர்ந்தவரான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போது கையால் நெய்யப்பட்ட புடவைகளை அணிவதை பராம்பரியமாக கடைப்பிடித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று 2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலுக்காக நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் இருந்து கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுச்சேலையை அணிந்து உள்ளார்.
பளபளப்பான பட்டு மற்றும் சிக்கலான கைவினைக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் புடவைகள் இந்தியாவில் மிகவும் பிரபலமான கைத்தறிகளில் ஒன்றாகும்.
2019-ம் ஆண்டு தனது முதல் பட்ஜெட் தாக்கலின் போது கைத்தறி புடவையை அணிந்து இருந்தார்.
2020ம் ஆண்டு பட்டு சேலை
2021-ம் ஆண்டு போச்சப்பள்ளி புடவை
2022-ம் ஆண்டு ஒடிசாவின் போம்காய் புடவை.
2023-ம் ஆண்டு கர்நாடகாவின் இல்கல்
2024-ம் ஆண்டு மங்களகிரி பட்டு
2024-ம் ஆண்டு இடைக்கால அமர்வுக்கு காந்தா எம்பிராய்டரி கொண்ட பட்டு சேலை
2025-ம் ஆண்டு பத்மஸ்ரீவிருது பெற்ற துலாரி தேவி பரிசளித்த தந்தம் கொண்ட மதுபானி கையால் வரைந்த புடவையை அவர் அணிந்திருந்தார்.






