என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம்: நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
- நெல்லை மாவட்டத்தில் 1 முதல 9 வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு விடுமுறை.
- தற்போது மழை பெய்து வருவதால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 9 முதல் 12 வரை பள்ளிகள் திறக்க முடிவு செய்யலாம் என செய்தி வெளியானது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் 17 மற்றும் 18-ந்தேதிகளில் அதீத கனமழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம், குளங்கள் உடைப்பால் பல கிராமங்ளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் இன்னும் சில கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்த வண்ணமே உள்ளது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து மெல்லமெல்ல சீராகி வருகின்றன. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இன்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 9 முதல் 12-ம் வகுப்புகள் வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மழை வெள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள 9 பள்ளிகள் திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் இன்று காலை ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அந்தந்த இடங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் "நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம். பிரைமரி மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி வற்புறுத்தினால கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளுக்கு வரச் சொல்லியோ, சிறப்பு வகுப்புகள் சொல்லியோ மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பக்கூடாது" குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்