தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை

வரும் 29ம் தேதி அதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை
Published on

தமிழகத்தில் வரும் நவம்பர் 28, 29ம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் வரும் 29ம் தேதி அதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகனமழை பெய்யும் என்ற ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com