கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில், நாளை மறுநாள் மீண்டும் விசாரணை

விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது.சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில், நாளை மறுநாள் மீண்டும் விசாரணை
Published on

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க. கட்சி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது.

சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com